இந்த வேத வாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று THIS DAY THIS SCRIPTURE IS FULFILLED பிப்ரவரி, 19. 1965 பார்க்வியூ 1. நாங்கள் ஜெபத்தில் தலைவணங்க, நீங்கள் விரும்பினால், நின்று கொண்டே ஜெபியுங்கள். 2. பரலோகத்திலிருக்கிற அன்புள்ள பிதாவே, இன்றிரவு இயேசு கிறிஸ்துவின் மகிமையான அதிசயமான சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க மீண்டும் ஒரு வாய்ப்பைத் தந்தமைக்காக நாங்கள் நன்றியுள்ளவரர்களாய் இருக்கிறோம். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். இந்த குளிரிலே இந்த ஜனங்கள் இங்கே கூடி தேவனிடமிருந்து விசேஷமான சத்தியத்தைக் கேட்க, விசுவாசத்தோடும், ஆர்வத்தோடும் எதிர்பார்த்து, தங்களுடையக் கண்களை உமக்கு ஏறெடுக்கிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். இந்த விசுவாசத்துடன், கர்த்தாவே, நாங்கள் ஒவ்வொரு கூட்டத்துக்கும் வருகின்றோம். முந்தின நாள் இரவு அந்த கூடாரத்திலே நடந்த கூட்டத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். நேற்று சாயங்காலம் இந்த கூடாரத்திலே நடந்த கூட்டத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். இன்றிரவும் கூட உம்மை எங்கள் மத்தியிலே காண எதிர்பார்க்கிறோம். 3. பிதாவே, தன் கையை அசைக்க முடிந்த எவரும் வேதாகமத்தின் பக்கங்களைப் புரட்டலாம். ஆனால் ஒரே ஒருவர் தான் வார்த்தையை உண்மையானதாகவும் உயிர்ப்பிக்கப் பட்டதாகவும் ஆக்க முடியும். அவர் நீரே. இன்றிரவு, பிதாவே, நீர் இவ்வண்ணமே வார்த்தையை எங்களுக்குக் கொடுக்க எதிர்பார்க்கின்றோம். ஒவ்வொரு துறையிலும் எங்களை ஆசீர்வதித்தருளும். கடந்த வருடங்களிலே நாங்கள் எங்கள் வாழ்க்கையில் நேசித்தவரைக் காணும் நேரம் நெருங்கி வருகிறதினால் எங்கள் இருதயங்கள் எவ்வளவோ களிகூறுகின்றன. நாங்கள் முகமுகமாய்க் கண்டு களிகூருவோம். கர்த்தாவே, சிலர் புதிதாக விசுவாசிகளானார்கள். நேற்றிரவு நடந்த கூட்டத்திலே மனந்திரும்பினவர்கள் எத்தனையோ பேர். இன்று காலையிலே வந்து நாற்பதும், ஐம்பதுமாக உம்முடைய நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். தேவனே, உம்மால் முன்குறிக்கப்பட்ட ஒவ்வொரு வித்தும் சுவிசேஷ வெளிச்சத்தைப் பார்த்து மந்தையை வந்து சேர தயவாய்த் தொடர்ந்து கிரியை செய்தருளும். 4. இன்றிரவு எங்களை வார்த்தையால் மறைத்தருளும். உலகக் காரியங்களுக்கு எங்களைக் குருடராக்கியருளும். எங்கள் மனக்கண்களினால் இயேசுவைக் காண செய்தருளும். குன்றின் மேல் இயேசு தெய்வீக ரூபமடைந்த காட்சியை இன்று எங்கள் நடுவில் அனுப்பி, நாங்கள் இயேசுவை விட வேறெந்த மனிதனையும் காணாதபடி செய்தருளும். அவர் மகிமைக்காக, அவர் சுவிசேஷம் நிரூபிக்கப்பட்டுத் துவங்க, நாங்கள் அவர் நாமத்திலே வேண்டிக் கொள்கின்றோம். ஆமென். நீங்கள் உட்கார்ந்துக் கொள்ளலாம். 5. இந்த ஒலிபெருக்கியை அல்லது இந்த சாய்வுமேஜையை சற்று பக்கமாகத் திருப்பப் போகிறேன். இது சரியானபடி அமர்ந்தால் இருபக்கமும் இருக்கும் சபையாரை என்னால் காணக் கூடும். அந்த ஒலிபெருக்கிகளை இந்தப் பக்கம் கொண்டு வந்தால் நலமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நல்லது. சற்று நேரம் பொறுமையாய் இருங்கள். 6. இன்றிரவு நாங்கள் முக்கியமாக சபைக்கூடத்திலிருந்து தொலைபேசியின் மூலம் அரிசோனா, டெக்ஸாஸ், இன்னும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் எல்லையிலிருக்கும் நண்பர்களை வாழ்த்துகின்றோம். இது முழு தேசத்துக்கும் தொலைபேசியின் மூலம் போகிறது. தேவன், நம்மை ஆசீர்வதிப்பாரென்று நம்புகின்றேன். 7. இடது பக்கம் பின்னால் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு நான் பேசுவது கேட்கிறதா? மிக்க நல்லது. அவர்கள் தொலைபேசி சரியான படி வேலைச் செய்கிறதா என்று பார்க்கப் போகிறார்கள். 8. இன்றிரவு எல்லாரும் சந்தோஷமாய் இருக்கிறீர்களா? மிக்க நல்லது. இந்தப் பக்கம் இருக்கிறவர்கள்? ஆமென். நீங்கள் எல்லாரும் சுகமாய் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். இன்றிரவு இருப்பது போல நாளை இரவும் ஜனம் மிகுதியானால், அவர்கள் தொலைபேசியின் மூலம் பிரசங்கத்தைக் கேட்க ஆவண செய்யப்படும் - அதாவது, அடுத்த கூடார சபைக்கு, ஏனென்றால் நாளைக் காலையில் ஒரு புஷ்பக்கலைஞன் அந்த ஆலயத்தை மத்தியானத்தில் நடக்க இருக்கும் ஒரு திருமணத்துக்காக அலங்கரிக்கப் போகிறான். அங்கே கூட்டம் நடத்த முடியாது. ஆகவே, அந்த சபையார், நாளை நடக்கப் போகும் கூட்டத்தை சகோதரன் ரட்டல் என்பவரின் சபையிலே (அந்த சபையார் நமது உடன் விசுவாசிகள்) - மெயின் ரோடு 62-ம் நம்பர் கட்டிடத்திலே - ஆவண செய்கிறார்கள். அது உங்களுக்கு அறிவிக்கப்பட்டதா? அறிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கேயும் அதிக ஜனமிருந்தால் அவர்களை க்ளார்க்ஸ்வில் என்னும் இடத்திலுள்ள சகோதரன் ஜூனியர் ஜேக்ஸனுடன் சேர்ந்து பிரசங்கத்தை கேட்க அனுப்பப்படுவார்கள். சகோதரன் ரட்டலின் சபை அருகாமையில் இருப்பதால், ஜனங்களை அங்கே அனுப்புவார்கள். நாமும் அதை கவனிக்க முடியும். நாளைக்கு நூறு அல்லது இரு நூறு பேர் ஞானஸ்நானம் எடுக்கப் போகிறார்கள். அதைப் பார்க்க மறக்காதீர்கள். 9. நாளை இரவு..... நான் பிரசங்கிப்பதற்கு முன் எதையும் அறிவிக்க விரும்புவதில்லை . ஆனால் ஓர் இரவு இந்தக் கூட்டத்தில் அல்லது ஒரு நாள், "யார் இந்த மெல்கிசேதேக்கு?" என்ற தலைப்பில் பேசலாம் என்று இருக்கிறேன். ஏனென்றால் அது ஒரு செய்தி. நாம் வெளிப்பாடுகளின் காலத்தில் வாழ்கின்றோம். மெல்கிசேதேக்கை குறித்து "இவன் யார்?” என்று பல காலங்களில் கேள்வி எழுந்தது. அவர் யார்? என்ற கேள்விக்கு தேவனிடன் பதில் உண்டு என்று நம்புகின்றேன். மெல்கிசேதேக்கை சிலர் ஆசாரியன், அதாவது மதகுரு என்றும், சிலர் ராஜா என்றும், இன்னும் சிலர்.... ஆனால் ஒன்று இருக்க வேண்டும். ஒரு கேள்வி இருக்குமானால் அதற்கு ஒரு சரியான பதில் இருந்தே தீரும். முதலில் பதில் இல்லாமல் ஒரு கேள்வி எழும்ப முடியாது. 10. இன்றிரவு அவருடைய வார்த்தையிலிருந்து, அதாவது வேதாகமத்திலிருந்து, நாம் வாசிக்கப் போகிறோம். தேவன் நம்மை ஆசீர்வதிப்பாரென்று நம்புகிறோம். 11. கார் நிறுத்தம் இடத்திலே உங்கள் கார்களை நிறுத்தி அங்குள்ள போலீஸ்காரருடன் ஒத்துழைத்தீர் களென்று'. நீங்கள் ஒத்துழைத்தீர்கள் என்று பில்லி பவுல் என்னிடம் கூறினான். அது மிக்க நல்லது. அப்படியே செய்யுங்கள். 12. நாங்கள் கூட்டங்களுக்கு உபயோகிக்கும் கூடாரத்தை இங்கே கொண்டு வந்து இந்த நகரத்தின் பால் என்னும் பூங்காவிலே கூடாரம் அடித்து பல நாட்கள், மூன்று அல்லது நான்கு வாரங்கள் வரை, உயிர்ப்பிக்கும் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்த இருக்கிறோம். (ஒரு வேளை கூடிய விரைவில் நடத்தப்படும். இப்போது நாம் ஒருவரையொருவர் போதாத அளவுக்கு அறிகிறோம். ஏனென்றால் நாங்கள் வந்து, போய் வருகிறோம் என்று சொல்லிவிட்டுப் போய் விடுகிறோம். நான் ஒரு தடவை வந்து, இங்கே இரவிலும், பகலிலும் தங்கி, இரவு-பகலாக பிரசங்கிக்க விரும்புகின்றேன். அப்போது இரண்டொரு இரவு பிரசங்கித்து விட்டுப் போய் விட முடியாது. சிலர் வீட்டுக்கும் போய் தம் ஆடு மாடுகளை கவனித்து விட்டு, அடுத்த வாரம் வந்து கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். நான் அத்தகைய கூட்டத்தை விரும்புகின்றேன். கர்த்தர் உங்களுடனே இருப்பாராக. 13. ஞாயிறு காலை அல்லது சனிக்கிழமை இரவு நான் இங்கிருந்து போகுமுன் (இந்தக் கூட்டங்களொன்றில்) விவாகமும் விவாகரத்தும் என்பதைப் பற்றிய சத்தியத்தை பிரசங்கிக்க இருக்கிறேன். கேட்க விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். இன்றைய உலகத்தில் இது பெரிய பிரச்சனைகளிலொன்று. உண்மையில் சரியான பதில் வேத வார்த்தையிலுண்டு என்று நம்புகின்றேன். நான் வந்து இதைக் குறித்துப் பேசுவேன் என்று வாக்களித்தேன். இது உண்மை . 14. எனக்குத் தெரிந்த வரை ஜெபர்ஸன் நகரத்திலே கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாகிய ஞாயிற்றுக்கிழமை என்ற தலைப்பில் பேச வேண்டுமென்று இருக்கிறேன். நாம் சூரியன் உதயமாகும் போது ஆராதனை நடத்தலாம். பின்னர் உயிர்த்தெழுந்த நாளாகிய ஞாயிறு அன்று ஆராதனை நடத்தலாம். இதை முன்னதாகவே அறிவிப்போம். ஆராதனை நடத்த இடத்தைக் குறிக்க வேண்டும். கூடுமானால், கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமைக்காக அல்லது சனிக்கிழமைக்காகவும் ஞாயிற்றுக் கிழமைக்காகவும் இடத்தைக் குறித்து வாடகைக்கு எடுக்க வேண்டும். கர்த்தர் வர நாள் சமீபித்துக் கொண்டே இருக்கிறது. ஆகாய விமானத்தில் இங்கும் அங்குமாகச் சென்று பிரசங்கம் செய்ய வேண்டியவனாயிருக்கிறேன். முதலாவது நான் பிரசங்கக் கால அட்டவணையில் எந்த நாள் இங்கே பிரசங்கம் செய்யச் சரிபடும் என்று பார்க்க வேண்டும். கலிபோர்னியா நகரத்திலே என் பிரயாணத்தைக் குறிக்கும் திட்டத்தைப் பார்த்த பின்னரே இங்கே கூட்டம் நடத்த நாள் குறிக்கலாம். பின்னர் நான் உடனே ஆப்பிரிக்கா கண்டத்துக்குப் போக வேண்டும். ஆகவே இங்கே நடக்க இருக்கும். கூட்டத்தின் நாளைத் தெரிந்து கொள்ளுங்கள் எனக்காக ஜெபமும் செய்யுங்கள். 15. இன்றிரவு உங்களுடைய கவனத்தை தேவ வார்த்தைக்கு அழைக்கிறேன். அது லூக்கா 4-ம் அதிகாரம் 16-ம் வசனத்தில் துவங்கும். இயேசு, "உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத் தினம் நிறைவேறிற்று” என்றார். (லூக்கா 4:21). 16. தேவனுடைய வார்த்தை எவ்வளவு வல்லமையுள்ளது என்பதை அறிந்து இப்பொழுது ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டும். நாம் இயந்திரங்களை வர்ணிக்கலாம். அதைச் செய்ய பெலன் அவசியம். ஒரு மோட்டார் வண்டியின் இயந்திரத்தின் செய்முறையைப் பற்றி பேசலாம். ஆனால் மின்சாரமில்லையானால், தள்ளும் வல்லமை இல்லையானால், சக்கரம் சுழலாது - வண்டி நகராது. 17. அவர் வளர்க்கப்பட்ட ஊராகிய நாசரேத்துக்கு இயேசு திரும்பினார். இந்த வசனத்திலே காண்கிறபடி, நாசரேத்து ஊரார், "இன்னினை காரியத்தை நீ கப்பர்நகூமிலே செய்தாய் என்று கேள்விப்பட்டோம். இப்பொழுது இங்கே, உன் சொந்த ஊரிலே என்ன செய்கிறாய்? பார்ப்போம்” என்று அவரைக் கேட்டார்கள். 18. அதற்கு இயேசு, “ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்பட மாட்டான்.” என்றார். நாசரேத்திலே அவர் வளர்க்கப்பட்டார். அவரை அவர்கள் அறிந்திருந்தார்கள். உலகில் தகப்பனற்றுப் பிறந்தார் என்ற இழிவான பெயர் அவருக்கு இருந்தது. அவரை அவர்கள் முறைதவறி பிறந்தக் குழந்தை என்றார்கள். யோசேப்புடன் மரியாள் சட்டப்படி திருமணம் செய்யுமுன்பே அவள் கர்ப்பவதியானாள் என்று அவமதித்துப் பேசினார்கள். ஆனால் அது அவர்கள் நினைத்தபடி அல்ல அது அப்படி அல்ல என்று நமக்குத் தெரியும். 19. இந்த வேத பாகத்தின் மேல் என் பார்வை எப்படி விழுந்தது என்றால் சில காலத்துக்கு முன் அரிசோனா நாட்டின் போயநிக்ஸ் நகரத்திலே கூட்டம் நடத்தின் கடைசி நாளன்று, அதாவது பரிபூரண சுவிசேஷ உத்தியோகஸ்தன் என்னும் குழுவினரால் நடத்தப்பட்ட சர்வதேச கூட்டத்தின் கடைசி நாளன்று ஒரு சம்பவம் நடந்தது. அந்தக் கூட்டத்தைக் காண ஒருவர் வந்திருந்தார். அவர் ஒரு கத்தோலிக்க பாதிரியார். அவர் கல்தேயா தேசச் சடங்குகளைக் கொண்ட அப்போஸ்தல கத்தோலிக்கச் சபையைச் சேர்ந்தவர். அவர் பெயர் மிக உயர்ந்த சபைகுரு ஜான் ஸ்டான்லி, ஓ.எஸ்.டி. அவர்கள். அவர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் கத்தோலிக்க நகர சபைகளுக்கெல்லாம் பிரதான குருவாகப் பணியாற்றுகிறவர். இது அவர் கொடுத்த அட்டைச் சீட்டு இதில் அவருடைய விலாசம் எழுதப்பட்டு இருக்கிறது. 20. பரிபூரண சுவிசேஷ உத்தியோகஸ்தன் என்னும் குழுவினரால் நடத்தப்பட்டக் கூட்டத்தைக் காண அவர் வந்திருந்தார். அவரை நான் ஒரு நாள் முன்னதாகவும் அங்கே கண்டேன். சனிக்கிழமை அல்லது சனிக்கிழமை காலை உணவு சமயம் நான் பேசிக் கொண்டு இருக்கையில் அவர் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். "நான் பேசும் எல்லாவற்றையும் இவர் ஏற்றுக் கொள்ளவில்லை” என்று நினைத்தேன். நீங்கள் அவரை அங்கே கண்டிருப்பீர்களானால், அவர் தம் தலையைக் கீழும், மேலுமாக அசைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் அவருடைய எண்ணத்தை என்னால் அறிந்துக் கொள்ள முடியவில்லை. 21. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிரசங்கம் செய்ய எழுந்து நின்றேன். பிரசவ வேதனை என்னும் தலைப்பில், கர்ப்பவதி குழந்தையுடன் வேதனைப்படுகிறாள். அவள் பிரசவத்தில் வேதனைப்படுகிறாள். (யோவான் 16:21) என்று இயேசு கூறின வார்த்தையிலிருந்து இவ்வண்ணம் பிரசங்கம் செய்ய இருந்தேன். "உலகம் பிரசவ வேதனையில் இருக்கிறது. ஒரு வித்து எப்படி ஒரு புதிய வித்தை உற்பத்தியாக்கத் தானே அழுகிப் போகிறதோ, அப்படியே நாம் பழையதை விட்டு விலக, புதியவை பிறக்கும். முதலாம் உலக மகா யுத்தம் உலகத்தை வேதனைக்குள், பிரசவ வேதனைக்குள்ளாக்கினது. உலகத்துக்குப் பயங்கரமான வேதனை உண்டானது. ஏனென்றால் உலகத்தை அழிக்க விஷவாயு உபயோகிக்கப்பட்டது. இரண்டாம் மகா யுத்தம் இன்னும் அதிகமான உபாதையை விளைவித்தது. அணு குண்டுகளும் வெடிகுண்டுகளும் உபயோகிக்கப்பட்டன. உலகம் இன்னொரு பிரசவ வேதனையைத் தாங்க முடியாது. குண்டுகளை நினைத்த இடத்துக்கு தூக்கி எறியும் ஆயுதங்கள் இவ்வுலகத்தை வெறுமையாக்கி, புதிய உலகத்தைப் பிறக்க வைக்கும், இப்படி நடக்கும் என்று வேதாகமம் கூறுகின்றது. 22. "ஒவ்வொரு தீர்க்கதரிசியின் செய்தியும் இஸ்ரவேலரை ஒரு பிரசவ வேதனைக்குள்ளாக்கினது. ஏனென்றால் வேத வித்துவான்களும், குருமார்களும் ஸ்தாபன சபைகளை ஏற்படுத்தும் போதெல்லாம் தீர்க்கதரிசிகள் வந்து சபையைச் சீர்படுத்தினர். "கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், என்ற வார்த்தைகளால் தீர்க்கதரிசிகள் சபையை ஆட்டி வைத்த போது, சபை ஸ்தாபனம் பிரசவ வேதனைப்பட்டது. இறுதியில் பிரசவ வேதனை சுவிசேஷ குமாரன் பிறக்கும் வரை சபையை வேதனைக்குள்ளாக்கினது. அப்பொழுது தேவ வார்த்தை மாமிசமானது 23. "ஆகவே இன்றிரவு சபை ஒரு குமாரனை -தேவனுடைய குமாரனை மீண்டும் ஒருமுறை பிறக்க வைக்கும். எல்லா மத வித்துவான்களும், எல்லா சபை - ஒழுங்குகளும், எல்லா ஸ்தாபன சபைகளும் இச்செய்தியின் கீழ் அழுகி, நம்மைப் பிரசவ வேதனைக்குள்ளாக்கின. தேவனுடைய செய்தி எப்பொழுதும் சபைகளை அபாண்டமான வேதனைக்குள்ளாக்குகிறது. சில காலத்துக்குப் பின்னர் சபை ஒரு மணவாட்டியை பெற்றெடுப்பாள்: அந்த வேதனை இயேசு கிறிஸ்துவை மணவாட்டியிடம் கொண்டு வரும். ... ஏற்றுக் கொள்ளவில்லை என்று நினைத்தவனாக நான், பேச எழுந்து நின்ற என் மனைவி எனக்கு வாங்கிக் கொடுத்த புதிய வேதாகமத்தைத் திறந்து, ஒரு குறிப்பிட்ட வார்த்தையைத் தேடினேன். என் மனைவி எனக்கு இந்த வேதாகமத்தை கிறிஸ்மஸ் வெகுமதியாக அளித்தாள். என்னுடைய பழைய வேதாகமம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்டது. அது துண்டு துண்டாகக் கிழிந்து விட்டு இருந்தது. நான் அதைத் திறக்கும் போதெல்லாம் அதன் பக்கங்கள் காற்றில் பறக்கும். ஆனால் அந்த புத்தகத்தில் நான் எல்லா வேத வாக்கியங்களையும் துரிதமாக எடுப்பது வழக்கம். ஏனென்றால் நான் அதை ஆழ்ந்து படித்து பழக்கப்பட்டிருந்தேன். கிழிந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஆலயத்துக்குப் போவது அசிங்கமாக இருந்தது. ஆகவே புதிய புத்தகத்தைக் கொண்டு போனேன். 25. வாசிக்க யோவான் 16ம் அதிகாரத்தைக் குறித்து வைத்திருந்தேன். இந்த அதிகாரத்தைத் தேடினேன். ஆனால் இந்த அதிகாரம் என் புதிய புத்தகத்தில் இருக்கவில்லை "என்ன புதுமை?” என்று நினைத்தேன். அதை மறுபடியும் திருப்பிப் பார்த்தேன். அந்த அதிகாரம் அங்கே இல்லை என் பிராணத் தோழனான சகோதரன் ஜேக்மூர் (லூசியானா நாட்டைச் சேர்ந்த ஷிரீவ் போர்டு நகரத்தார்) அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார். "சகோதரன் ஜேக். அது பரிசுத்த யோவான் 16ம் அதிகாரத்தில் தானே இருக்கிறது?” என்று கேட்டேன். 26. "ஆமாம்” என்றார் அவர். 27. அப்போது அந்த கத்தோலிக்கப் பாதிரியார் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து, சுமார் நூறு பிரசங்கிகள் உட்கார்ந்திருந்த இடத்தைத் தாண்டி, தன்னுடைய அலங்காரமான அங்கியிலும் கவுனிலும் சிலுவையுடனும் வந்து என் அருகில் நின்று, "என் மகனே, உறுதியாக நில். தேவன் அசைவாட ஆரம்பிக்கிறார்” என்றார். 28. "ஒரு கத்தோலிக்கப் பாதிரியார் என்னிடம் இப்படிச் சொல்லுகிறாரே” என்று ஆச்சரியப்பட்டேன். 29. "என்னுடைய வேதாகமத்திலிருந்து வாசி” என்றார். 30. வேதபாகத்தை அவருடையப் புத்தகத்திலிருந்து வாசித்தேன். தலைப்பை எடுத்துச் செய்தியைப் பிரசங்கித்தேன். 31. பிரசங்கத்தை முடித்து விட்டு நான் மேடையிலிருந்து போனப் பின் அவர் "ஒன்று சபையானது. அது, "இருக்கும் குழப்பத்திலிருந்து வெளியே வர வேண்டும். அல்லது சபையின் குழப்பத்திலிருந்து நாம் வெளியேற வேண்டும்" என்றார். ஆக, இவ்விரண்டில் ஒன்று நடந்தே தீரும். 32. நாங்கள் காரில் உட்கார்ந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தோம். (டூசானுக்கு). சாயங்காலமாய் இருந்தது. திண்பண்டம் வேண்டுமென்று சொல்லிக் குழந்தைகள் அழுதன. ஒரு சிறு கடையிலிருந்து ஏதேனும் வாங்கக் காரை நிறுத்தினேன். "நீர் அங்கே நின்று வேதாகமத்தில் தடுமாறினதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்த மாதிரி என் வாழ்வில் எப்போதுமே நடக்கவில்லை” என்றாள் என் மனைவி. இன்னும் அவள், "நீர் பதறிப் போகவில்லையா?” என்று கேட்டாள். 33. "இல்லை. அந்த அதிகாரம் அங்கே இருக்குமென்று நினைத்தேன். ஆனால் அந்தப் பக்கமே அந்தப் புத்தகத்தில் இல்லை. அது ஒரு அச்சுப்பிழை” என்றேன். 34. "அந்த வேதாகமத்தை நான் உமக்கு வாங்கித் தந்தேன். எனவே அங்கே இருந்த யாவரும் என்னையே உற்றுப் பார்ப்பது போலத் தென்பட்டது." 35. அதற்கு நான், "அதனால் உன் தப்பு என்ன, வேதாகமத்தில் அது ஒரு அச்சுப்பிழை. அச்சகத்தார் அந்தப் பக்கத்தை அந்தப் புத்தகத்திலே இணைக்காமல் விட்டு விட்டு இருக்கிறார்கள்” என்றேன். 36. வண்டியிலிருந்து கீழே இறங்கி மறுபடியும் வேதாகமத்தைப் புரட்டிப் பார்த்தேன். 16-ம் அதிகாரம் இருக்கும் பக்கமும் 17ம் அதிகாரம் இருக்கும் பக்கமும் கீழே இருந்து சுமார் 3 அங்குலத்தில் ஒட்டிக் கொண்டிருந்தன. புதிய புத்தகமாக இருக்கவே அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை . ஆகவே நான் 16ம் அதிகாரத்துக்குப் பதிலாக 17ம் அதிகாரத்தை வாசிக்கலானேன். 37. "சில காரணத்தால் தான் அப்படி நடந்தது. பரவாயில்லை . எல்லாம் சரிதான்” என்றேன் நான். 38. பின்னர் தெளிவான ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது என்னிடம், "தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து தம்முடைய வசனத்தின் படியே ஓய்வு நாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து வாசிக்க எழுந்து நின்றார். அப்பொழுது ஒரு ஆசாரியன் ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்தை அவரிடம் கொடுத்தான். அவர் அதிலிருந்து 1ம் அதிகாரத்தை வாசித்தார். வாசித்த பின் உட்கார்ந்து, புத்தகத்தை, வேதாகமத்தை திருப்பிக் கொடுத்து விட்டார். ஜெப ஆலயத்திலுள்ள எல்லா கண்களும் அவர் மேல் நோக்கமாயிருந்தது. தெய்வீக வார்த்தைகள் அவரின் வாயினின்று புறப்பட்டு, அவர், "இந்த வேத வாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று என்றார்” என்றது. 39. "இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று”, வேத வசனம் எவ்வண்ணம் பொருத்தமாக இருக்கிறது. நீங்கள் இதைக் கூர்ந்து கவனித்தால், கர்த்தர் வாசித்தது. ஏசாயா 61:1-2 என்பது விளங்கும் ஏசயா 61:1-2. ஏசாயா-61-றின் முதலாம் வசனத்திலிருந்து வாசிப்பீர் களானால், "கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர். என் மேல் இருக்கிறார். கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைக் கூறவும்.” என்று எழுதி இருக்கின்றதை காண்பீர்கள். இதை வாசித்து விட்டு அங்கேயே நிறுத்தமானது ஏன்? அடுத்து இருக்கும் “நம்முடைய தேவன் நீதியை தரிசிக்கட்டும். நாளையும் கூறவும் என்னும் வார்த்தைகளை அவர் வாசிக்கவில்லை . ஏனென்றால் அது அவருடைய முதல் வருகையின் காலத்தில் நடக்க வேண்டிய காரியமாக இருக்கவில்லை. இந்த வார்த்தைகள் அவர் மறுபடியும் வரும்போது நிறைவேறப் போகும் வார்த்தைகளாம். வேத வசனம் தப்பிதமாகக் கூறுவதில்லை என்பதைக் கண்டு கொள்ளுங்கள். வேத வசனம் தவறுவதில்லை. அது பரிபூரணமானது. எங்கே தேவ வசனம் நின்றதோ அங்கே இயேசுவும் நிறுத்தினார். ஏனென்றால் அதுதான் அவர் காலத்திலே நிரூபிக்கப்பட வேண்டியதாக இருந்தது. 40. அதாவது அது அவருடைய முதல் வருகை இரண்டாம் வருகையில் அவர் உலகத்துக்கு நியாயத் தீர்ப்பை கொண்டு வருவார். நியாயத் தீர்ப்பு முதல் வருகையில் இல்லை . முதல் வருகையில் அவர் "அநுக்கிரக வருஷத்தைப் போதித்தார். வாக்குத்தத்தத்தின் வார்த்தையில் நிற்பதைக் கவனி. மேசியா சபைமுன் நிற்பது எவ்வளவு புதுமையானது இந்த உன்னதமான வார்த்தைகளைக் கவனியுங்கள். "கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தை பிரசித்திபடுத்த”. இதைச் சபையின் முன் நின்று தாமே கூறினார். 42. அநுக்கிரக வருஷம் என்பது வேதாகம வாசகர்களாகிய எல்லோரும் அறிந்திருக்கிறபடி யூபிலி வருஷம் என்று பொருள்படும். கடன்பட்டவர்கள். கடனுக்குப் பதிலாக மகனை அல்லது மகளை (லேவி 25:8-15, உபா.15:16-17) அடமானத்தில் அடிமையாக்கியிருந்தால், 50ஆம் வருஷத்தில் யூபிலி எக்காளம் ஊதும் போது, அடிமைகளும், சிறைப்பட்டவர்களும், விடுதலையாகி தங்கள் தங்கள் வீட்டிற்கு போவார்கள். எத்தனை ஆண்டுகளாகச் சிறைப்பட்டிருந்தாலும், அடிமைகளாயிருந்தாலும், யூபிலி எக்காளச் சத்தம் விடுதலையாக்குகிறது விடுதலையானான் இனிமேல் அவன் அடிமையல்ல. 43. ஆனால் அடிமையாயிருக்கப் பிரியப்படுகிறவனை, ஆலயத்துக்குக் கொண்டு போய் அவனைக் கதவண்டை நிற்க வைத்து, ஒரு கம்பியால் அவன் காதைத் துளைப்பார்கள். அப்பொழுது அவன் தன் வாழ்நாளெல்லாம் தன் எஜமானுக்கு அடிமையாக இருப்பான். (யாத் 21:5-6) 44. இது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கு எவ்வளவு... எடுத்துக்காட்டாக இருக்கிறது. விடுதலையின் நேரம் அங்கீகரிக்கப்படும் சமயம். அது பிசங்கிக்கப்படும் நேரம் தேவனுடைய சுவிசேஷ எக்காளம் தொனித்தும், நீ யாராய் இருந்தாலும் சரி. எந்த ஜாதியானாயிருந்தாலும் சரி நீ எந்த ஸ்தாபன சபையின் அங்கத்தினனாயிருந்தாலும் சரி. நீ எவ்வளவு தான் பாவத்தில் மூழ்கியிருந்தாலும் சரி. எப்பேர்பட்ட கறை உன்னிலே இருந்தாலும் சரி - நீ விடுதலையடையலாம். நீ விடுதலையடையலாம். நீ சுயாதீனனாகலாம். ஆனால், சுவிசேஷம் பிரசிங்கப்பட்டும், உன் முதுகைக் காட்டி நீ திரும்பினால், நீ அதைக் கேட்க மறுத்தால், கம்பியால் உன் காது துளைக்கப்படும். அர்த்தமென்னவென்றால், நீ கிருபைக்கும், நியாயத்தீர்ப்புக்கும் நடுவிலுள்ள எல்லையைக் கடந்து விட்டாய் மறுபடியும் நீ சுவிசேஷத்தைக் கேட்க மாட்டாய். உனக்கு விடுதலை இல்லை. நீ உலக சபை ஒழுங்குக்கு உன் வாழ்நாளெல்லாம் அடிமையானாய் அநுக்கிரக வருஷத்தின் வார்த்தையை நீ கேட்காதபடியினால் உனக்கு இப்படி ஆகும். 45. அவர் வாசிக்காத அடுத்த பாகம், நான் சொன்னபடி, வரப்போகும் மேசியா சீக்கிரம் நியாயத்தீர்ப்பை உலகத்துக்குக் கொண்டு வருவார் என்பதைக் குறிக்கிறது. 46. அவரை யார் என்று எப்படி கண்டு கொள்ளாமற் போனார்களோ? அவரை எப்படி விட்டு விட்டார்களோ, வெளிப்படையாகத் தம்மைக் காட்டியும், அறிவித்திருந்தும், அவர்கள் எப்படித் தள்ளி விட்டார்களோ அவரை எதிரிலே நிற்கக் காண்பது...... அவர் எப்பேர்பட்ட வார்த்தை நினைத்துப் பாருங்கள் "உங்கள் கண்கள் காண இந்த வேத வாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று" 47. இதைக் கூறினது யார்? தம்முடைய வார்த்தையைத் தாமே விளக்கும் தேவனே கூறினார். "இந்த வேத வாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” என்றார். மேசியா, தாமே சபையின் முன்னிலையில் நின்று தம்மைக் குறிக்கும் வேத பாகத்தைத் தாமே வாசித்து, "இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” என்று சொல்லியும், அவரை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. 48. எவ்வளவு விசனகரமானது ஆனால் அது அப்படித் தான் நடந்தது. இப்படிப் பல தடவை நடந்தது, எப்படி நடந்தது? மற்ற காலங்களில் நடந்த மாதிரி. ஜனங்கள் மனித விளக்கத்தை நம்பி குருடரானார்கள். இது தான் அவர்கள் குருடர்களானதற்குக் காரணம். அந்நாட்களிலே, விசுவாசிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் மனித விளக்கத்தை நம்பி மோசம் போனார்கள். ஆகவே இயேசு, அவர்களுடைய அந்தஸ்திலும் அல்லது சமுதாயத்திலும் இல்லாமல் தள்ளி வைக்கப்பட்டார். அவர்கள் அவரை அவர்களில் ஒருவராக எண்ணவில்லை. ஏனென்றால் அவர் வித்தியாசமானவராய் இருந்தார். இயேசு கிறிஸ்துவின் தன்மையும், தோற்றமும் பிரசித்திப் பெற்று நிகரற்று இருந்தும், அவர் தம்மைத் தேவ குமாரன் என்று காட்டியும், வேதவாக்கியம் அவரைச் சரியானபடி வெளிப்படுத்தியும், அவரைக் குறித்து எழுதப்பட்டது. அவர்கள் முன் நிறைவேறியும், அவர்களால் அவரைக் கண்டு கொள்ளக் கூடவில்லை. ஒரு கிறிஸ்தவன் அறிய வேண்டியதை அவன் தன் வாழ்வில் எடுத்துக் காட்டுகிறதைப் பார்த்துத் தான் அவன் கிறிஸ்தவன் என்று அறியப்படுகிறான். 49. அவர் அங்கே நின்று, "உங்கள் கண்கள் காண இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” என்று சொன்னது எப்படி இருந்திருக்கும் எப்பேர்பட்டத் தோற்றமாக இருந்திருக்கும் அவர் அவ்வளவு வெளிப்படையாக இருந்தும் கூட அந்த ஜனங்கள் அவரைத் தவறாக எண்ணினார்கள். ஏன்? அக்காலப் (போலி) பாதிரியார்களின் போக்கில் நின்று, அவர்கள் கொடுத்த வேத விளக்கத்தைக் கொண்டு நடந்ததே காரணம். சரித்திரம் எப்போதும் கூறினதையே திரும்பக் கூறுகிறது. வேத வாக்கியங்கள் அவரைப் பற்றிய சத்தியங்களை ஒன்றாகத் தொகுத்து அவரைச் சுட்டிக் காட்டுகின்றன. அவரை வெளிப்படுத்துகின்றன். 50. (இயேசுவைக் குறித்து) அது வேதாகமத்தில் கூறியிருக்கிறபடி, "எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்” என்னும் வார்த்தை இருவரைக் குறிக்கிறது - யாக்கோபாகிய இஸ்ரவேலையும் கிறிஸ்துவாகிய இயேசுவையும் குறிக்கிறது. இவ்விருவரையும் தேவன் எகிப்பது தேசத்திலிருந்து அழைத்தார். (மத்.2:15, ஓசியா 11:1, யாத்.4:22, ஏசாயா 41:8, 42:1-4, 52:13-14) ஒரே வேத வாக்கியம் இருவருக்கும் உண்டானது. இயேசு அவருடைய மேன்மையான குமாரனாய் இருந்தார். யாக்கோபு அவருடைய குமாரனாய் இருந்தான். இதை ஸ்கோபீல்டு குறிப்பும் மற்ற குறிப்புகளும் விளக்குகின்றன. இந்த வசனம் இரண்டு பதில்களைக் கொடுக்கின்றது. வெளியே அழைக்கப்பட்ட யாக்கோபுக்கும், வெளியே அழைக்கப்பட்ட இயேசுவுக்கும் பொருந்துகின்றது. 51. இன்றைக்கும் அது அப்படித் தான் கூறுகின்றது நாம் இத்தகைய கலக்கத்தில் இருப்பதன் காரணமென்னவென்றால், தேவனுடைய வார்த்தை மனிதரால் பலவிதமாக விளக்கப்பட்டு இருக்கிறது. தேவ சத்தியத்தை ஜனங்கள் விளங்கிக் கொள்வதில்லை. தம்முடைய வார்த்தையை விளக்க தேவனுக்கு யாரும் அவசியப்படுவதில்லை. தேவனே தமது வார்த்தையை விளக்குகின்றார். 52. ஆதியிலே தேவன், "வெளிச்சம் உண்டாகக் கடவது” என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. அதற்கு விளக்கமொன்றும் அவசியமில்லை . 53. அவர், "ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்” என்றார். அவள் கர்ப்பவதியானாள். அதற்கும் விளக்கம் அவசியமில்லை. 54. தேவன் தமது வார்த்தைகளை நிறைவேற்றி நிரூபிக்கும் போது அது அவர் கொடுத்த விளக்கமாகிறது அது அவருடைய விளக்கம் - வார்த்தை நிறைவேறும் போது அது தானே விளக்கமாகிறது தேவனுடைய விளக்கம் அவர் கூறின் வார்த்தை நிறைவேறுவதிலுள்ளது. இப்படித்தான் உங்களுக்கு விளக்கங்கள் கூறுகின்றார். 55. உதாரணமாக, வெளிச்சம் இல்லாமலிருந்த போது அவர், "வெளிச்சம் உண்டாகக் கடவது” என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. அது எவராலும் விளக்கப்படுவது அவசியமில்லை . ஆனால் மனிதன் தரும் விளக்கம் அவருடைய வார்த்தையுடன் கலக்கப்பட்டிருந்தது. நீங்கள் அதை நம்பினால், நீங்கள் வழி தப்பிப் போகிறீர்கள். அது இப்படித்தான் எல்லா காலங்களிலும் இருந்து வருகிறது. 56. சிந்தித்துப் பாருங்கள் மேசியா அவர்கள் முன் நின்று, தம்மை வெளிப்படுத்தினது எத்தனை வல்லமையாக இருந்திருக்கும் அவரை அவர்கள் ஏன் கண்டு கொள்ளவில்லை? அவரை அவர்களுடைய வழிகாட்டிகள் விளங்கிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் விளங்கிக் கொள்ளாத காரணம் அவரைக் குறித்து எழுதப்பட்ட வேத வாக்கியத்தை நம்பாமற்போனதே. இக்காரணத்தினால் தான் அவர்கள் அவரை அவமதித்து, "இவன் முதலாவது - முறை தவறி பிறந்தவன்" என்றார்கள். இந்த மனித விளக்கத்தை நாம் நம்ப மாட்டோம். எத்தனை ஆண்டுகள் புரண்டாலும், நாம் இத்தகைய விளக்கத்தை நம்பவே மாட்டோம். நம்மைக் கொல்லும் உபத்திரவம் வந்தாலும் அவர் கன்னிகைக்குப் பிறந்தார் என்பதை மறுதலிக்க மாட்டோம் இதுவும் நிறைவேறும். மிருகத்தின் முத்திரை மனிதர் மேல் அடிக்கப்படும் காலத்தில் அந்த நாள் தூரமில்லை (வெளி : 3:6) இது போல் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அனுமதிக்க மாட்டார்கள். இந்நாட்களிலே யேகோவா செய்யும் கிரியைகளுக்குச் சாட்சியாக பலர் உயிரையும் இழந்து இரத்த சாட்சியாவார்கள். இப்பொழுது கொடுக்கப்படும் வெளிப்பாட்டைப் பெற மனிதர் உயிரைக் கொடுத்தும் பெற மாட்டார்கள் 57. பெரிய சபைகள் ஐக்கியப்படும் போது, (இப்பொழுதே உலக சபைகள் கூடுகின்றன). உங்களுடைய வாழ்க்கையின் சாட்சியை முத்திரிக்க வேண்டியதாகும். விசுவாசிக்க உங்களுக்கு ஓர் தருணமிது. அவரை ஆக்கினைக்குள்ளாக்கின. ஆயக்காரர் உயிர்த்தெழுந்து வந்தால், அவர் மேல் குற்றம் சாட்ட அவர்களுக்கு இடமிருக்காது. 58. ஆனால் நீங்கள், "நான் அக்காலத்திலே இருந்திருந்தால், இன்னின்ன மாதிரி செய்திருப்பேன்” என்கிறீர்கள். 59. அது உங்களுடையக் காலமாயிருக்கவில்லை. ஆனால் இது உங்களுடையக் காலம் இது உங்களுடைய சமயம். 60. "அவர் மாத்திரம் இங்கே இருந்திருப்பாரானால்....” என்கிறீர்களா? 61. வேதாகமம், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்கிறது - மாறாதவர். ஆகவே அவர் இங்கே இருக்கிறார். உலகம் நாகரீகப்பட்டது. பெருந்தன்மையில் வளர்ந்தது. கல்வியிற் பெருகினது. ஆக அவர் இங்கே ஆவியாயிருக்கிறார். அவரைக் கொல்லவும் மரணத்துக்குள்ளாக்கவும் முடியாது. அவர் ஒரு தடவை மரித்தார். அவர் இனி மரிப்பதில்லை. பாவத்துக்காக பலியாக்க தேவன் அவரை மாம்சத்தில் உருவாக்கினார். ஆனால் இனி அவர் மரிக்க மாட்டார். ஏனென்றால் அவர் பரிசுத்த ஆவியாயிருக்கிறார். 62. எத்தனையோ காரியங்களைக் குறித்து அவரை எதிர்த்தார்கள். அவர்களுடைய அந்தஸ்தில் அவர் சேரவில்லை. ஆனாலும் அவரைக் கெட்டவன் என்றார்கள் என்பதைக் கவனி. சங்கங்களிலும் ஆசாரிய ஊழியத்திலும் அவர் பங்கெடுக்கவில்லை. அவர்களுடன் சேர்ந்து அவர் எதையும் செய்யவில்லை. ஆனாலும் அவர்கள் கட்டினதை அவர் கிழித்துத் தள்ளினார் 63. அவரைத் தாழ்மையானவர் என்கிறோம். தாழ்மையானவர் தான். ஆனால் தாழ்மை என்பதற்குத் தவறாய் அர்த்தம் கொள்கிறோம். அவரைக் கருணையுள்ளவர் என்கிறோம். ஆனால் கருணை என்றால் என்ன என்பதைப் புரிந்துக் கொள்வதில்லை. மனித அனுதாபம் கருணையல்ல. தயவு என்றால் தேவனுடைய சித்தத்தின் படி செய்தல் என்று பொருள். ஆவர் பெதஸ்தா வாசல் வழியாகச் சென்றார். (யோவான் 5:2, 15) அங்கே அநேக நோயாளிகள் இருந்தனர். அனேகர் என்பது ஒரு குறிப்பிட்ட எண் அல்ல. ஆனால் அநேகர் இருந்தனர். நொண்டி, குருடன், சப்பாணி, சூம்பின் உறுப்புடையவன். அவர் எப்பொழுதும் கருணை காட்டினார். அவர் ஒரு மனிதனிடம் சென்றார். அவன் நொண்டியாகவும், குருடனாகவும், சப்பாணியாகவும், சூம்பின உறுப்புடையவனாகவும் இருக்கவில்லை. ஒரு வேளை அவன் பலத்தைக் குறைக்கும் வியாதியில் இருந்திருப்பான். பலவீனனாய் இருந்திருப்பான். தப்பித் தடுமாறி நடந்திருப்பான். 38 ஆண்டுகளாக வியாதியாய் இருந்தான். அது மரணத்துக்கேதுவான வியாதியல்ல. அவன் தன் படுக்கையில் படுத்திருந்தான். 64. அவர் அவனை, "சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று கேட்டார். (யோவான் 5:6). 65. அதற்கு அவன், "ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும் போது, என்னைக் குளத்தில் கொண்டு போய் விடுகிறதற்கு ஒருவருமில்லை. நான் போகிறதற்குள்ளேயே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கி விடுகிறான்” என்றான். 66. கவனி. அவனால் பேச முடிந்தது. பார்க்க முடிந்தது. நடக்க முடிந்தது. ஆனால் அவன் பெலவீனனாக இருந்தான். 67. இயேசு அவனை நோக்கி, “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட” என்றார். அதைக் குறித்து ஜனங்கள் அவரிடம் கேள்வி கேட்டார்கள். இது வேதாகமத்தில் எழுதப்பட்டிருப்பது உங்களுக்கு ஞாபகமிருக்கும்.... (யோவா. 5:8-19) 68. இன்றிரவு அவர் ஜெபர்ஸன்வில் நகரத்துக்கு வந்து இத்தகைய அற்புதத்தைச் செய்தால் இங்குள்ளவர்களும் அவரிடம் அப்படித்தான் கேள்வி கேட்பார்கள். இதில் ஆச்சரியமில்லை. அவர் ஒரு காரியத்தைச் செய்தாரென்பது ஞாபகமிருக்கட்டும். - தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற வந்தார். யோவான் 5:19-ல் அதற்குப் பதில் காண்கிறோம். அவர்: "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார் அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” என்றார். 69. இயேசு செய்தது மோசே உரைத்தத் தீர்க்க தரிசனத்தின் நிரூபனம் என்று அவர்கள் அறிந்துக் கொண்டிருக்க வேண்டும். (19-2). மோசே, "உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக.... எழும்பப் பண்ணுவார்” என்று உரைத்தான். (உபா . 18:15) 70. கவனி... பல ஆண்டுகளாக அந்நிலையில் இருந்தான் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அவர் தீர்க்கதரிசியாய் இருந்ததனால் அந்த மனிதனுடைய நிலையை அறிந்தவராய் அவனைத் தேடி - ஜனங்களைக் கடந்துச் சென்று, ஜனநெருக்கத்ததிலே நுழைந்துச் சென்று, அந்த மனிதனைக் கண்டுபிடித்தார். நொண்டிகளையும், சப்பாணிகளையும், குருடர்களையும், சூம்பின் உறுப்புடையவர்களையும் கடந்துச் சென்றார். கருணையுள்ளவராய் இருந்துங்கூட மற்றவர்களைச் சுகப்படுத்தாமல், அந்த குறிப்பிட்ட மனிதனைத் தேடிச் சென்றார். தயவு, கருணை என்பவை தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதாகும். அவர் இதைத் தான் செய்தார். 71. நமக்குத் தெரிந்தவரை, அவர் அவர்களுடன் சேரவில்லை . அவர்களுடைய அந்தஸ்தில் கூடவில்லை. அவர்களுடைய சமுதாயத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டிருந்தார். அவர் ஒரு நாள் தேவாலயத்தினுள் பிரவேசித்தார். தேவனுடைய வீடு அசுத்தமாய் இருப்பதைக் கண்டார். இன்றைய ஆலயங்களும் கூட அப்படித்தான் இருக்கின்றன. அவர்கள் விற்பதையும், வாங்குவதையும் பணம் மாற்றுவதையும் கண்டார். பணமேஜைகளைக் கீழே தள்ளினார். கயிற்றை எடுத்துப் பின்னி பணம் மாற்றுகிறவர்களை ஆலயத்தினின்று துரத்தி அடித்தார். கோபத்தால் அவர்களைக் கண்டார். "என்னுடைய வீடு ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கிறது (அல்லேலூயா) நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் " என்றார். (மத்.1:13). வேறொரு இடத்தில் அவர், "உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்குகிறீர்கள்” என்றார். (மத்.15:6). 72. அப்பேர்பட்ட கூட்டம் அவரில் விசுவாசிக்குமா? ஐயா, இல்லை, உன்னதமான தேவனுடைய வல்லமை அவர்கள் நடுவில் அசைவாடுவதை உணராதவண்ணம் அழுகிப் போய் கிடந்த ஸ்தாபன - குப்பைகளிலும் அன்றைய அவிசுவாச - அசுத்தத்திலும், பன்றிகள் சேற்றில் புரண்டு தம் வாலை ஆட்டுவது போல அவர்கள் இயேசுவைப் பார்த்து ஆட்டினார்கள். அந்தத் தாழ்மையான ஸ்தீரி அவருடைய வஸ்திரத்தைத் தொட்டதும் அவரிலிருந்து வல்லமைப் புறப்பட்டு அவளைக் குணமாக்கிற்று (மாற்கு 5: 25-34). ஆனால் குடித்த வெறித்த ஒரு சிப்பாய் அவருடைய முகத்தில் துப்பின் போது அவன் ஒரு வல்லமையையும் காணவில்லை. நீ அவரை அணுகும் விதத்தைப் பொறுத்து அவர் இருக்கிறார். நீ எதை எதிர்பார்க்கிறாயோ அதைப் பொறுத்து இருக்கிறது. நீ தேவலாயத்துக்குப் போவதும் நீ எதை எதிர்பார்த்துப் போகிறார் என்பதைப் பொருத்து இருக்கிறது. 73. நாம் அவரை அங்கே நிற்கக் காண்கிறோம். ஆயக்காரர் அவரைக் குறித்து எச்சரித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆயக்காரர் ஜனங்களிடம், "அடுத்த ஓய்வுநாளன்று அவன் வருகிறான். வந்தால் அவன் பேச்சைக் கேட்டகாதீர்கள். நீங்கள் அங்கே போய்உட்காரலாம். ஆனால் அவன் சொல்வதற்குச் செவி கொடுக்காதீர்கள் ஏனென்றால் அவன் நம் சபையைச் சேர்ந்தவனல்ல. அவன் சமுதாயத்திலிருந்து தள்ளப்பட்டவன். பிரசங்கிக்க உத்தரவு பத்திரம் அவனிடத்தில் இல்லை. அவனுக்கு ஒரு ஸ்தாபனங் கூட இல்லை - ஸ்தாபனப் பத்திரமுமில்லை. அவனிடம் ஒன்றுமில்லை" என்று சொல்லியிருப்பார்கள். 74. "அவன் என்ன?” 75. "அவன் ஒரு நாடோடிப் பையன். தச்சன் வீட்டிலே முறை தவறிப் பிறந்தவன். அவன் தன் தாயின் திருமணத்துக்கு முன்பே பிறந்தவன். ஏதோ ஒரு சக்தியைக் காட்டி அதை மறைக்கப் பார்க்கிறார்கள். மேசியா பரலோக வாசல் வழியாய் வருவார் என்று நமக்குத் தெரியும். வந்து பிரதான ஆசாரியனிடம் சென்று, "காய்பாவே, இதோ வந்துள்ளேன்" என்பார்” என்று கூறியிருப்பார்கள். 76. அவர் இப்படிச் செய்யவில்லை என்ற நாம் அறிவோம். ஏனென்றால் வேதவாக்கியத்தில் இப்படிச் செய்வாரென்று எழுதப்படவில்லை மனிதன் போதித்தப் பாரம்பரியத்தை விசுவாசித்ததே அவர்கள் அந்நிலையில் இருந்ததற்குக் காரணம். எப்படி வருவார் என்று எழுதப்பட்டிருந்ததோ அப்படியே தான் அவர் வந்திருந்தார். அங்கே அவர்கள் முன்நின் வார்த்தையிலிருந்து இந்த பாகத்தை வாசித்தார்: "உங்கள் கண்கள் காண இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று”. ஆனாலும் அவர்கள் அவரைக் கண்டு கொள்ளவில்லை. அவரை அடையாளம் கண்டுபிடிக்கக் கூடவில்லை. இப்படியே தான் ஜனங்கள் எல்லா காலத்திலும் செய்தார்கள். 77. நோவா தன் பேழைக்குட் பிரவேசித்து கதவு அடைக்கப்பட்ட நாளிலே அவனும் இப்படிச் சொல்லியிருப்பான். நோவா ஜன்னலைத் திறந்து ஜனங்களிடம் (தேவனே பேழையின் கதவைச் சாத்தினார் என்பது ஞாபகமிருக்கட்டும்). "உங்கள் கண்கள் காண இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று. வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” என்று கூறியிருக்கக் கூடும். (ஆதி.6ம் 7ம் அதிகாரங்கள்). ஆனால் அவர்களுக்கு நேரம் முடிந்து விட்டு இருந்தது. பேழைக்குள் வர ஜனங்களை 120 ஆண்டுகளாக அழைத்துக் கொண்டிருந்தான் நோவா. பிரசங்கித்துக் கொண்டிருந்தான். கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், "பிரளயத்தால் உலகம் அழியும், விடாமல் மழை பெய்யும்” என்று கூறி அவன் பலநாள் காத்திருந்தான். இறுதியில் நோவா, "இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” என்று கூறியிருக்கக்கூடும். 78. அக்கினி ஸ்தம்பம் சீனாய் மலையின் மேல் இறங்கின அன்று, தான் முன்னுரைத்ததைக் குறித்து மோசே, "இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” என்று கூறியிருக்கக்கூடும். (யாத்.19:18-5 20:18-1). 79. மேசே தேவனால் அழைக்கப்பட்டவன் என்பது உங்களுக்குத் தெரியும்-அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசியாய் இருந்ததால், தீர்க்கதரிசியாக அழைக்கப்பட்டதால், அவன் தெய்வீக அனுபவத்தை அடைய வேண்டியவனாய் இருந்தான். அவன் கூறினது நிறைவேற வேண்டியதாயிற்று. நிறைவேறாமற் போயிருந்தால் அவனை யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். தேவனுடன் முகமுகமாய்ப் போசாதவனும், பாலைவனத்தில் தேவனையே சந்திக்காதவனும், தன்னைத் தீர்க்கதரிசி என்று அழைக்க முடியாது. உலகத்திலுள்ள எல்லா நாஸ்திகர்களும் மோசேயுடன் நடந்த சம்பவத்தை மறுதலிக்கக் கூடவில்லை. மோசே பாலைவனத்தில் இருந்தான். அங்கே என்ன நடந்தது என்று அவனுக்குத் தெரியும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் அந்த அனுபவத்தைப் பெற்றவனாய் இருக்க வேண்டும். இல்லையேல் அவன் கிறிஸ்தவனாயிருப்பது அர்த்தமற்றது. உன் சொந்த அனுபவம் . 80. சில காலத்துக்கு முன் என் சகோதரியின் மகனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவன் ஒரு கத்தோலிக்கச் சிறுவன், அவன் என்னிடம், "மாமா, சத்தியத்தை அறிய நான் இங்குமங்கும் ஓடிப் பார்த்தேன்” என்றான். இந்த கூட்டங்களுக்கு வரும் முன் அவன் ஒவ்வொரு இரவும் அழுதுக் கொண்டிருந்தான். பீடத்துக்கு வந்து தான் குற்றவாளி என்று அறிக்கையிடுவது போல அவன் பல கனவுகளைக் கண்டதுண்டு. 81. "மெல்வின், நீ எங்கோ சென்றாலும் சரி, நீ எத்தனைச் சபைகளில் சேர்ந்தாலும் சரி, எத்தனை தடவை நீ, "அர்ச்சிஷ்ட மரியாயே" என்று ஜெப மாலையை எண்ணினாலும் சரி, அல்லது நீ மனிதனிடமிருந்து எத்தனை ஆசீர்வாதங்களைப் பெற்றாலும் சரி. நீ தேவனுடைய ஆவியினால் பிறக்கவில்லையானால், உனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. மனித இருதயத்தை இது ஒன்றே திருப்தியாக்கும்” என்றேன் நான். 82. மறுபிறப்புக்குப் பதிலாக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் உன் பெயரை ஒரு புத்தகத்தில் எழுதி, ஒரு பாதிரியார் உன்னுடன் கைக்குலுக்க, "நீ மறுபிறப்பு பிறந்து விட்டாய்” என்கின்றனர். ஆனால், நண்பர்களே, அது ஒரு கொள்கை அது வேத சத்தியமில்லை அது சத்தியமாக இருந்திருந்தால், அப்போஸ்தலருடைய நடபடியின் இரண்டாம் அதிகாரத்தில், நீ படிக்க, இவ்வாறு எழுதப்பட்டிருக்க வேண்டும்: "பெந்தேகோஸ்தே என்னும் நாள் வந்த போது, சபை குருக்கள் வெளியே போய் ஜனங்களுடன் கைகுலுக்கினர்.” 83. ஆனால் அது அப்படி எழுதப்படவில்லை . அது, "பெந்தேகோஸ்தே என்னும் நாள் வந்த போது (சபை ஆரம்பித்தபோது), அவர்களெல்லாரும் ஒரு மனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று” என்று எழுதப்பட்டிருக்கிறது. 84. பரிசுத்த ஆவி முதல் தடவை அப்படித்தான் வந்தது. அப்படியே தான் அக்காலத்திலிருந்த இக்காலம் வரை வருகிறது அவர் தேவன், அவர் மாறுவதில்லை . 85. இதின் மேல் இப்பொழுது பலர் இடறி விழுகிறார்கள். "இது வேறொரு நாளுக்குரியது” என்கிறார்கள். ஆனால் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். அப்போஸ்தலர் 2:38ன் சிகிச்சைக்குத் தக்கவாறு - ஒவ்வொரு காலத்திலும் சபையானது பரிசுத்த ஆவியை பெற்ற போது அது முதல் தடவை எப்படி வந்ததோ அப்படியே வந்து கொண்டிருக்கிறது. அது மாறவில்லை. மாறப் போவதில்லை. 86. (டாக்டர் ஒரு வியாதிக்கு மருந்து சீட்டு எழுதி கொடுக்கிறார். அதை அரைகுறையாய்ப் படித்த ஒரு மருந்து கடைக்காரனிடம் கொடுத்ததால் அவன் மருந்தில் கலப்படம் செய்து அது வேலை செய்யாத அளவுக்கு மருந்தைத் தயார் செய்து கொடுக்கிறான். அதில் அவன் விஷத்தைக் கலக்கிறான். அது உன்னைக் கொல்லும். டாக்டர் எழுதிக் கொடுத்த மாதிரி தான் மருந்து தயார் செய்யப்பட வேண்டும்.) டாக்டர் வியாதிக்கு மருந்து எழுதிக் கொடுப்பது போல, பெந்தேகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியைப் பெற டாக்டர் சீமோன் பேதுரு மருந்துச் சீட்டை எழுதிக் கொடுத்தான். 87. அவன் இந்த சிகிச்சையைக் கொடுக்கிறேன் என்றான் "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக் கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். இந்த "சிகிச்சை" உங்களுக்கும், உங்களுடையப் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” என்றென்றைக்குமுள்ள சிகிச்சை. 88. மோசே இத்தகைய அனுபவத்தைப் பெற்றிருந்தான். அவன் எகிப்து தேசத்துக்குச் சென்று இஸ்ரவேலரிடம், "நான் ஒரு அக்கினி ஸ்தம்பத்தைக் கண்டேன். அது எரிகிற புதரிலே இருந்தது. அந்த அக்கினியிலிருந்த அவர், "இருக்கிறவராக இருக்கிறேன். நீ ஜனங்களிடம் போ. நான் உன்னுடன் இருக்கிறேன். கோலை எடுத்து எகிப்தின் மீது நீட்டு. நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ அதுவே நடக்கும்” என்றார் என்றான். 89. ஒரு வேளை சில சபை குருக்கள், "அவன் செய்வது அர்த்தமற்றது” என்று சொல்லியிருப்பார்கள். 90. ஆனால் அவனுரைத்த வார்த்தை நிறைவேறினதைக் கண்டபோது அவர்கள் மந்தமாக இருக்கவில்லை. அவன் தேவனால் அனுப்பப்பட்டவன் என்பதைக் கண்டுக் கொண்டார்கள். 91. பின்னர் மேசே தான் கண்டது சத்தியம் என்று சாட்சி கொடுத்தான். அது சத்தியமாக இருந்தபடியினாலே, அதை அடையாளத்துடன் நிரூபித்து அந்த மனிதனுடைய வார்த்தை சத்தியம் என்பதை வெளிப்படுத்த தேவன் கடமைப்பட்டவராக இருந்தார் அது சத்தியம். 92. அந்நாளிலே இயேசு கிறிஸ்து அங்கே நின்று, "இந்த வேத வாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று" என்று வாசித்தார் என்றால், தேவன் அந்த வார்த்தையை நிறைவேற்றக் கடமைப்பட்டவராயிருந்தார். 93. இன்றிரவு நாம் இங்கே நின்று "இயேசுகிறிஸ்து நேற்றம், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறுகின்றோம். இது அவருடைய வார்த்தையாய் இருக்கிறபடியினாலே இதைத் தேவன் தாமே நிரூபிக்கக் கடமைப்பட்டவராய் இருக்கிறார் இப்பொழுது அந்த வார்த்தை என்ன செய்கிறது? அது அவரில் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் உண்டாக்குகிறது. அவருடைய வார்த்தையாகிய சத்தியத்தை விசுவாசிக் கிறதையும் நம்புகிறதையும் நிரூபிக்கிறது. 94. மோசே இஸ்ரவேல் புத்திரரையும் அவனைப் பின்பற்றினவர்களையும் எகிப்து தேசத்திலிருந்து வழி நடத்தின் போது என்ன நிறைவேறிற்று என்பதைக் கவனி. அவனைப் பின்பற்றாதவர்கள் எகிப்திலேயே தங்கி விட்டார்கள். மோசேயைப் பின்பற்றி, செங்கடலைக் கடந்து வனாந்தரத்துக்கு வந்த போது, தேவன் சீனாய் மலையின் மேல் இறங்கினார். அந்த அக்கினி ஸ்தம்பம் சீனாய்மலை முழுவதையும் தீயால் பற்ற வைத்தது. அங்கிருந்து ஒரு சத்தம் புறப்பட்டது - தேவன் பத்து கற்பனைகளைக் கொடுத்தார். மோசே ஜனங்கள் முன் நின்று, "இன்றையத்தினம் அவருடையத் தீர்க்கதரிசியாகிய நான் சொன்ன வேத வாக்கியம் நிறைவேறிற்று எரிகிற புதரிலே அவரைக் கண்டேன் என்றும், அக்கினி ஸ்தம்பத்திலிருந்து அவர், இது ஒரு அடையாளமாக இருக்கும். அந்த ஜனங்களை மறுபடியும் இந்த இடத்துக்குக் கொண்டு வருவாய்” என்று கூறினார் என்றும், அந்த மலையின் மேல் இறங்கின அக்கினி ஸ்தம்பம் தான் நான் கண்டது. அதிலே தேவன் இருக்கிறார் என்றும், நான் சொன்ன தீர்க்கதரிசனம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றும், நான் சொன்னது சத்தியம் என்பதை நிரூபிக்க தேவன் இங்கே வந்துள்ளார்” என்றும் சொல்லியிருக்கக் கூடும். 95. அவருடைய வார்த்தை இந்நாள்வரை சத்தியமாகவே இருந்து வருகிறது என்று உன்னதமான தேவன் நிரூபிக்கத்தக்கவாறு தேவன் நமக்கு சத்தியத்தை உண்மையாகவும் நேர்மையாகவும் போதிக்க மோசேயைப் போலுள்ள மனிதரை அதிகமாகக் கொடுப்பாராக அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். மோசேயைப் போலுள்ள மனிதனைக் கொடுப்பேன் என்று வாக்களித்தார். கொடுக்காமற் போவாரா? (உபா.18:15-19). 96. இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணப்பட்டு காதேஸ்பர்னெயாவுக்கு வந்திருந்தார்கள். கானான் தேசத்தை வேவு பார்க்கச் சென்று திரும்பி வந்த யோசுவாவும் கூட வார்த்தை நிறைவேறினதைக் குறித்து இவ்வண்ணம் கூறியிருக்கக் கூடும். கானான் தேசம் நல்லது என்று தேவன் சொல்லியிருந்த போதிலும் அவர்கள் சந்தேகித்து முணுமுணுத்தார்கள் (எண்.14:1-10) தேவன் அதைப் பாலும், தேனும் ஓடுகிற தேசம் என்றார். கானானை வேவு பார்க்க அனுப்பப்பட்ட 12 பேரில் யோசுவாவும், காலேபுமே தேவனுடைய வார்த்தையை விசுவாசித்தார்கள். அவர்கள் திரும்பி வந்த போது அடையாளத்தைக் கொண்டு வந்தார்கள். இரண்டுப் பேரால் மாத்திரமே தூக்கிக் கொண்டு வரத் தக்கதான ஒரு திராட்சைப் பழக் குலையைக் கொண்டு வந்தார்கள். (எண்.13:20-33). 97. யோசுவாவும், காலேபும் அவர்கள் முன் நின்று, "இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” என்று சொல்லிருக்கக் கூடும். "அது (கானான்) நல்ல தேசம் என்பதற்கு இதோ அடையாளம் இருக்கிறது” என்று சொல்லியிருக்கக் கூடும். ஏன், கண்டிப்பாக "நல்ல தேசத்துக்கு இதோ அடையாளம் இருக்கிறது. இதைப் போல திராட்சைப்பழம் எகிப்திலே கிடைத்ததா?" என்று கேட்டிருக்கக்கூடும். ஆனால் இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” என்று கூறியிருப்பார்கள். 98. அப்படியே எரிகோ நகரத்தை, ஒரு நாளுக்கு ஒரு முறையாக ஏழுமுறை சுற்றின்பின் மதில்கள் கீழே விழும் என்று உரைக்கப்பட்டது. கடைசி தடவை அவர்கள் சுற்றி வந்த போது மதில்கள் கீழே விழுந்தன. (யோசுவா 6:20). யோசுவா எழுந்து நின்று, "கர்த்தருடைய சேனையின் அதிபதி இப்படி நடக்குமென்று பல வாரங்களுக்கு முன் சொன்னது வேதவாக்கியமே - இன்றையத்தினம் வேதவாக்கியம் நிறைவேறிற்று மதில்களெல்லாம் விழுந்து தரைக்கு சமமாயின. வாருங்கள். போய் இந்த நகரத்தைப் பிடித்துக் கொள்வோம். அது நம்முடையதாகி விட்டது” என்று கூறியிருப்பான். 99. இதே வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று. தேவனுடைய மனிதன் சத்தியத்துக்காக நின்றான் என்பது எவ்வளவு ஆச்சரியமாய் இருக்கிறது . 100. இஸ்ரவேலர் யோர்தானைக் கடக்கும் போது அது ஏப்ரல் மாதமாக இருந்தது. யூதேயா மலையின் மேலுள்ள பனிக்கட்டி கரைந்து இந்நதியில் ஓடுவதால், வெள்ளம் புரண்டோடியது. அப்பொழுது அவர்கள் எப்படி நடந்துச் சென்றார்கள்? (யோசு.3:15-17) ஏப்ரல் மாதத்திலே யோர்தான் நதியில் வெள்ளம் புரண்டோடின போது தேவன் நம்மை இந்நதியைக் கடக்கச் செய்வார் என்று சொன்ன தளபதியாக யோசுவா எவ்வளவு பரிதாபமாக எண்ணப்பட்டு இருந்திருப்பான் 101. நேரம் இருப்பின் இங்கே நிறுத்தி உங்களுக்கு ஒரு குறிப்பைக் கொடுக்கட்டும். சில வேலையிலே நீங்கள் புற்று வியாதியாலோ அல்லது வேறொரு வியாதியாலோ பாதிக்கப்பட்டு இருக்கையில், நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்தும் ஏன் என் கதி இப்படி இருக்கிறது? நான் ஒரு கிறிஸ்தவனானால் என் கதி ஏன் இப்படி இருக்க வேண்டும்?” என்று நினைக்கலாம். 102. சில வேளையில் தேவன் நம்முடைய வாழ்க்கையில் இருள் பரவவிடுகிறார். அப்போது ஜெபிக்க முடியாத. நம்மைச் சுற்றிலுமுள்ளவர்களை நம்பவும் முடியாது: எங்கு சென்றாலும் சமாதானம் இருக்காது. பின்னர் தேவன் வந்து நீ, "இந்த வேத பாகம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” என்று சொல்லத் தக்கதாக ஒரு வழி வகுக்கிறார். "இப்படிச் செய்ய அவர் வாக்களித்திருக்கிறார்” என்று நீ சொல்லத்தக்கதாகச் செய்கிறார். 103. மூன்று எபிரேயப் புத்திரரைத் தேவன் எரிகிற அக்கினியிலே நடக்க வைத்தார். (தானியேல் 3:1-28). அவர்கள் “இந்த எரிகிற அக்கினியிலிருந்து எங்களுடைய தேவன் எங்களைத் தப்புவிப்பார். அப்படி தப்புவிக்கவில்லை என்றாலும் நாங்கள் உன்னுடைய உருவச்சிலை முன் தலைவணங்க மாட்டோம்” என்றார்கள். அக்கினியிலிருந்து வெளியே வந்த போது அவர்கள் மேல் நெருப்பின் நாற்றம் கூட இல்லாமல் இருந்தது. அக்கினி குண்டத்தின் நாற்றம் கூட அவர்கள் மேல் இருக்கவில்லை. அவர்கள் "இந்த வேத வாக்கியம் இன்றையத் தினம் நிறைவேறிற்று” (ஏசா 43:2) என்று சொல்லியிருக்கக் கூடும். 104. தானியேலும் சிங்கங்களின் கெபியிலிருந்து வெளியே வந்து இவ்வண்ண ம் கூறியிருக்கக் கூடும். (சங்.34:19) 105. நானூறு ஆண்டு சபைப் போதனைக்குப் பின் யோவான் ஸ்நானகன் வந்த போது சபையானது குழப்பத்திலிருந்தது. அவன் வனாந்தரத்திலிருந்து வந்து யோர்தான் நதிக்கரையோரம், "அந்த வேதபாகம் (ஏசாயா 40) இன்றையத்தினம் நிறைவேறிற்று” என்று கூறியிருக்கக் கூடும். 106. இங்கே சற்று நிறுத்தி அந்த முதிர்வயதான கத்தோலிக்கப் பாதிரியார் கூறினதைச் சற்று விளக்கட்டும். "மகனே, அந்த பிரசங்கத்தை நீ முடிக்கவில்லையே” என்றார் அவர். 107. "அமைதியாக இருங்கள்” என்றேன் நான். 108. "அந்த பெந்தேகோஸ்தே சபையார் அதை விளங்கிக் கொள்ளவில்லை என்கிறாயா? என்று கேட்டார். 109. "இல்லை ” என்றேன். 110. கத்தோலிக்கப் பாதிரியாராய் இருந்துங்கூட "எனக்கு விளங்குகிறது” என்று சொல்லி, "ஏன் தொடர்ந்து பிரசங்கள் செய்யவில்லை?" என்று கேட்டார் அவர். 111. "அமைதியாக இருங்கள்” என்றேன் நான். 112. "தேவனுக்கு மகிமை எனக்கு விளங்குகிறது ” என்றார் அவர். 113. நாங்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில், அந்த கூட்டத்திலே இருந்த அவருடையச் சகோதரியின் மேல் பரிசுத்த ஆவி அமர்ந்தது. அவள் தான் அறியாத பாஷையில் தீர்க்கதரிசனம் உரைத்து மொழி பெயர்த்தாள் அவள் உரைத்தது நானும் அந்தக் கத்தோலிக்கப் பாதிரியாரும் பீடத்தண்டை பேசின வார்த்தைகள்ே சென்ற வாரம் ஓர் ராபர்ட்ஸின் கூட்டத்திலே இதைக் குறித்துத்தான் பேச்சு நடந்தது - இரண்டு வாரங்களுக்கு முன் அந்தப் பாதிரியார் அங்கே உட்கார்ந்துக் கொண்டிருந்த போது... எப்படி பரிசுத்த ஆவி ஒரு ஸ்திரீயின் மேல் இறங்கி, அவள் மூலம் (அவருடைய சகோதரி என்று நினைக்கிறேன்) பீடத்தண்டை என்ன நடந்தது என்றும் எதை நாங்கள் மறைத்தோம் என்றும் கூறி அவர் வெளிப்படுத்தினார் 114. இன்றையத்தினம் சாயங்கால வெளிச்சம் (சகரியா 14:7) வந்துள்ளது. ஆனால் நாம் கண்டுக் கொள்ளவில்லை. நாம் வாழும் இந்த வேளையிலே இந்த வேதவாக்கியம் இன்றையத் தினம் நிறைவேறிற்று 115. "இன்றையத்தினம் நான் வனாந்தரத்திலே கூப்பிடும் சத்தமாயிருக்கிறேன். இது ஏசாயாவின் தீர்க்கதரிசனத்திலே உரைக்கப்பட்டு இருக்கிறது. கர்த்தருக்கு வழியைச் செவ்வை செய்யுங்கள் என்று யோவான் கூறினதை கவனியுங்கள். 116. அவனை, அவர்கள் கண்டு கொள்ளவில்லை . "ஓ, நீ இயேசுவாக இருக்கிறாய்.... நீ கிறிஸ்துவாக இருக்கிறாய்” என்றார்கள். 117. நான் கிறிஸ்துவல்ல, நான் அவருடைய பாதரட்சையைக் கழற்ற தகுதியானவன் அல்ல. உங்கள் நடுவில் அவர் எங்கேயோ இருக்கிறார்" என்றான் யோவான்ஸ்நானகன். அவர்கள் நடுவில் அவர் இருந்தார் என்று அவன் அறிந்திருந்தான். அவனுடைய நாட்களிலே அவர் அங்கே இருப்பேன் என்று தேவன் அவனுக்குச் சொல்லியிருந்தார். அவரை அவர்களுக்கு அவன் அறிமுகப்படுத்த வேண்டியவனாய் இருந்தான். 118. ஒரு நாள் அங்கே ஒரு வாலிபன் வந்து நிற்கிறதை யோவான் கண்டான். ஒரு வெளிச்சம் (அடையாளம்) அவர் மேல் இறங்கினதைக் கண்டு, "இதோ, தேவ ஆட்டுக்குட்டி இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” என்றான். 119. பெந்தேகொஸ்தே என்னும் நாளிலே ஜனங்கள் அவர்களைப் பார்த்து சிரித்த போது (அப்.2:1-32). பேதுரு எழுந்து நின்று யோவேல் 2:28 ஐக் குறித்துப் பேசினது உண்மை . அவர்கள் தங்கள் தங்கள் பாஷைகளில் பேசவில்லை. அக்கினி மயமான நாவுகளில் பேசினார்கள். வேதாகமத்தில் "அக்கினி மயமான நாவுகள்” என்றிருக்கிறது. அது பிரிந்த நாக்கு என்று பொருள்படுகிறது. எதையும் குறித்துச் சொல்லாமல் குடித்து வெறித்தவர்கள் உளறுவது போல இருந்தது. 120. அவர்களைப் பார்த்தவர்கள், "அவர்கள் குடித்து வெறி பிடித்திருக்கிறார்கள். அவர்களைப் பாரு, அவர்களுடைய நடிப்பைப் பாரு..... ஆணும் பெண்ணும் ஒழுங்கின்மையாக ஆடுகிறார்கள்” என்றார்கள். இப்படி சொன்னவர்கள் அக்கால மதத்தைக் தழுவியிருந்தவர்களே. 121. அப்பொழுது பேதுரு, "யூதர்களே, எருசலேமில் வாசம் பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துக் கொள்வீர்களாக..... நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறி கொண்டவர்களல்ல. பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்ட படியே இது நடந்தேறுகிறது. கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். (யோவேல் 2:28). இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” என்றான். 122. லூதர் சரியான சமயத்திலே வந்தார். வெஸ்லி சரியான சமயத்திலே வந்தார். பரிசுத்த ஆவியானவர் சரியான சமயத்திலே வந்தார். யாரும் சமயத்தவறி வரவில்லை . 123. நாம் வாழும் இந்நாளுக்கென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கும் வார்த்தையோடு இந்த காலத்தையும் சமயத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். கடந்த காலங்களிலே மனிதர் இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம்... இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம்" என்று கூற முடிந்தது என்றால், இன்றையத் தினத்தில் நிறைவேற வேண்டிய வேத வாக்கியத்தைப் பற்றி உங்களுக்குக் கவலை இல்லையா? இன்றைக்கென்று வாக்களிக்கப்பட்டிருப்பது என்ன? நாம் எங்கே நிற்கிறோம்? கடிகாரம், விஞ்ஞான கடிகாரம், நடு இராத்திரிக்கு மூன்று நிமிடங்கள் மாத்திரமே மீதியாயிருக்கிறது. நாம் எந்த சமயத்தில் வாழ்கின்றோம்? 124. உலகம் கோப வலிப்பிலிருக்கிறது. சபையானது களங்கப்பட்டுக் கிடக்கிறது. எங்கே நிற்கிறோம் என்பதை அறிகிறவர்கள் யாருமில்லை. இந்த நாளின் எப்பேர்ப்பட்ட சமயமித் இன்றையத்தினம் இந்த வேதவாக்கியம் நிறைவேறிற்று. 125. சபையின் நிலை - இன்றைய சபையின் நிலை... உலக அரசியல், நமது உலக ஒழுங்கு முதலியன நேர்மையற்று இருக்கின்றன. நான் ஒரு அரசியல்வாதியல்ல. நான் ஒரு கிறிஸ்தவன். அரசியலைப் பற்றி பேசுவது என் வேலையல்ல. ஆனால் அரசியல் இரு பக்கமும் நாறி கிடக்கிறது. 126. ஒரு தடவை ஓட்டுப் போட்டேன். அதுவும் இயேசுவுக்கே. நான் ஜெயிக்க இருந்தேன். பிசாசு எனக்கு எதிராக ஓட்டுப் போட்டான். கிறிஸ்து எனக்காக ஓட்டுப் போட்டார். எந்தப் பக்கம் ஓட்டுப் போடுகிறேன் என்பதைப் பொறுத்து இருக்கிறது. அவருக்க ஓட்டு போட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். உலகம் எதை வேண்டுமானாலும் கூறட்டும். நேற்றும், இன்றும், என்றும் அவர் மாறாதவர் என்பேன் நான் அவர் அதை நிரூபிப்பார். அவர் கட்டாயம் நிரூபிப்பார். 127. சட்டத்துக்கு விரோதமாக நடத்துதல் - இளைஞர் தம் கடமையில் தவறுதல். ஒரு காலத்தில் உலகத்துக்குப் பூவாகத் திகழ்ந்த நமது தேசத்தைப் பார். பல ஆண்டுகளுக்கு முன் நம் தேசத்தில் ஜனநாயகம் துவங்கிற்று - சுயராஜ்ய உறுதிமொழி - சுயராஜ்ய உறுதிமொழி கையொப்பமிட்டு நிலைநாட்டப்பட்டது. ஜனநாயகத்தைப் பின் பற்றினோம். நமது மூத்தோர்கள் கற்பித்ததைப் பின்பற்றினோம். ஒரு பெரிய தேசத்தையுடையவர்களாயிருந்தோம். இன்று அவள் (தேசம்) நொறுங்குகின்றான். நடுங்குகின்றாள். களைத்துப் போகிறாள். அழுகிப் போகிறாள். உள்நாட்டில் வரி வசூலித்து வெளிநாட்டு விரோதிகளிடமிருந்து நட்பை விலைக்கு வாங்குகின்றாள். அந்த நட்பை வாங்கி நமது முகத்தை பார்த்து அடிக்கிறாள். இது உண்மை . அரசியல் அழுகிப் போனது. தீட்டுப்பட்டுப் போனது - அடிவரை அழுகிப் போனது. எப்படி நடக்குமென்று மத்தேயு - 24ம் அதிகாரத்தில் எழுதியிருக்கக் காண்கிறோமோ அப்படியே நடக்கிறது. "ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும் ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்” இவைகளெல்லாம் நிறைவேறும். இப்பொழுது இதை கவனிப்போம். 128. நல்லது. வேறொரு காரியம்: விஞ்ஞானப் பரிசோதனையில் அபிவிருத்தியைப் பார். என் பாட்டனார் என் பாட்டியாரை மாட்டு வண்டியில் ஓட்டிச் சென்றார். இப்பொழுது அது ஒரு ஜெட் விமானம். ஒரு கிரகத்தின் சுற்றுப் பாதையில் விண்வெளிப் பரப்பிலே உலாவுதல். அது சாமார்த்தியமானது. இதைக் கூறினது யார்? "கடைசி நாளிலே அறிவு அதிகரிக்கும்” என்று தானியேல் 12:4-ல் கூறினான். நாம் வாழும் நேரத்தை இங்கே காண்கிறோம். 129. உலக நிலையும் விஞ்ஞான நிலையும் - இப்போது கவனி. இன்றையக் கல்வித்துறையிலே என்ன நடக்கிறது என்பதைக் கவனி. இதை மறுதலிக்க துணியாதே. செய்தித்தாளிலிருந்து கத்தரித்து வைத்துக் கொண்டிருக்கிறேன். தேவாலயத்திலே ஆண், பெண் புணர்ச்சியைக் குறித்து கற்பிக்கிறார்கள். நமது பள்ளிக்கூடங்களிலே ஆணும், பெண்ணும் புணர்ச்சியில் சம்மந்தப்பட்டு, இருவரும் வாழ்வில் இணைக்கப்பட்டு மகிழ முடியுமா என்று ஆராய்ச்சி செய்கிறார்கள் ஐயா, ஆமாம். 130. நம்முடைய போதக ஊழியம் எப்படி இருக்கிறது. கலிபோர்னியா நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடந்த சம்பவங்களைச் செய்தித் தாளிலிருந்து கத்தரித்து வைத்திருக்கிறேன். அங்கே சில பாதிரிமார்கள் (பேப்டிஸ்ட், பிரஸ்பிடீரியன் சபை ஊழியர்கள்) ஒரு பாலுறவு கொள்ளும் ஒரு கூட்டத்தை அழைத்து வந்து அவர்களோடு மனிதன் மனிதனுடன் செய்யும் ஆண் புணர்ச்சியைச் செய்ய வைத்து, அவர்களை இவ்வழியாய் தேவனுக்கென்று ஜெயித்ததாகக் கூறுகின்றனர். அது இக்காலத்திற்குரிய சாபம் - இயற்கைக்கு விரோதமான ஆண்புணர்ச்சி சோதோமில் நடந்த அருவருப்பு இப்படிச் செய்தவர்களைச் சட்டம் கைது செய்தது. 131. நாம் எங்கே போகிறோம்? நம்முடைய விசுவாசத்தின் கீழ் எல்லா சபை ஒழுங்குகளும் அழுகிப் போயின. சென்ற வருஷத்திலிருந்து இதுவரை அமெரிக்க ஐக்கிய நாட்டிலே ஆண் புணர்ச்சியில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை 20 லிருந்து 30 சதவீதத்துக்கு எட்டி இருக்கிறது. அதைச் சிந்தித்துப் பார். ஆண்கள் புருஷனும், மனைவியும் போல் வாழ்க்கையை நடத்துதல் தாம் நகரத்தில் நடந்தது போலவே நடக்கிறது. 132. பெரும்பாலோர் சட்டத்துக்கு விரோதமாய் நடத்தல், இளைஞர் தமது கடமையில் தவறுதல் - நாம் எந்த நேரத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இந்த வேதவாக்கியம் இன்றையத் தினம் நிறைவேறிற்று 133. மதப்பற்றுள்ள உலகம். திருச்சபையோ, சபை, வெளியே அழைக்கப்பட்ட சபை (அழைக்கப்பட்ட சபை என்கிறோமே அது), கடைசி சபைக் காலம், பெந்தேகோஸ்தே சபைக்காலம் - அது எங்கே இருக்கிறது? வேதவாக்கியத்திலுள்ள படி அது லவோதிக்கேயாவிலே இருக்கிறது. (வெளி.3:14.18). 134. அவர்கள் கட்டுப்பாட்டை நழுவ விட்டார்கள். அவர்களுடைய மனைவிகள் அரை அம்மணமாக உடுத்துகிறார்கள். அவர்களுடையக் கணவர்கள் ...... அது ஒரு பயங்கரமானக் காரியம் சபைக் கண்காணிகளின் நிர்வாகத்தில் சிலர் மூன்று அல்லது நான்கு முறை திருமணம் செய்தவர்கள் அவர்கள் கட்டுப்பாட்டை விட்டு சீர்கேட்டைச் சொந்தமாக்கிக் கொண்டவர்கள். அவர்கள் ஆலோசனை நிர்வாகிகளில் உலகத்துடன் சேர்ந்து உட்கார்ந்தார்கள். அவர்கள் கட்ட நினைக்காத கட்டிடத்தை இன்று கட்டுகிறார்கள். ஓர் இடத்தில் அவர்களிலொருவர் நாற்பது கோடி ரூபாய்க்கு ஒரே கோவில் கட்டுகிறார் - நாற்பது கோடி ரூபாய்க்கு ஒரே கோவில் கட்டுகிறார் - நாற்பது கோடி ரூபாய் பெந்தேகோஸ்தே சபை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு மூலையில் கஞ்சிராவை அடித்து ஜெபித்து வந்தவர்கள், கேட்டால், "ஏனென்றால்.... நாங்கள்...' என்கிறார்கள் வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரத்திலே கூறியுள்ளபடி, அவர்கள் ஐசுவரியவான்கள், "நாங்கள் ஐசுவரியவான்கள், நான் ராணியைப் போல் உட்கார்ந்திருக்கிறேன். எனக்கு ஒன்றும் குறைவில்லை” என்கிறார்கள். "நீ நிர்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படதக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியவில்லை" - உன் நிலை இப்படி இருக்கிறது என்று உனக்குத் தெரியவில்லை உங்கள் கண்கள் காண இந்த வேத வாக்கியம் இன்றையத் தினம் நிறைவேறிற்று. ஆமென். 135. ஆமென் என்றால் அப்படியே ஆகட்டும் என்று பொருள். நான் சொன்னதே நடக்கட்டுமென்று நான் சொல்லிக் கொள்ளாமல் அதைச் சத்தியம் என்று நம்புகிறேன் என்று அர்த்தங்கொள்கிறேன். இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று. 136. இன்றைய பெந்தேகோஸ்தே சபை லவோதிக்கேய நிலையில் இருக்கிறது. ஆங்கிலேயர் அவலட்சணமாக நடனமாடும்போது வாசிக்கும் ராகத்தை சிலர் சபையில் வாசித்து - அதைக் கிறிஸ்தவ மத ஒழுங்கு என்கிறார்கள். பேரிகை கொட்டும் போது, ஓ என்று சத்தமிட்டு மேலும் கீழுமாக குதிக்கிறார்கள். அந்த பேரிகை கொட்டுவதை நிறுத்தி விட்டால் எல்லா மகிமையும் இல்லாமற் போகிறது. 137. தேவனுக்கு அது ஒரு உண்மையான துதியாய் இருக்குமானால், அவர்கள் சீட்டி அடிக்க மாட்டார்கள். உண்மையான துதியை நிறுத்த உலகத்தில் வல்லமை இல்லை. அது ஆவியானவர் கற்பிக்கும் துதியானால் அவர்கள் டோல் அடிக்கும் போது துள்ள மாட்டார்கள். உண்மையான துதி ஆவியானவரால் உண்டாயிருக்கிறது. பல காலத்துக்கு முன் அவர்கள் அதை மறந்து விட்டார்கள். ஏனென்றால் அவர்கள் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பங்கிட்டு விட்டார்கள் - பல பாஷையில் ஜெபிப்பது துவக்கத்தின் அடையாளம் என்கிறார்கள். பேய்களும் சூன்யம் செய்கிறவர்களும் பல பாஷைகளில் ஜெபித்து நடிப்பதை நான் கண்டுள்ளேன். 138. உன்னிலிருக்கும் தேவனுடைய வார்த்தையே பரிசுத்த ஆவியாயிருக்கிறது. வார்த்தையை ஏற்றுக் கொள்ளும் போது ஆவி உன்னில் நிரூபிக்கப்படுகிறது. வார்த்தைக்கு வெளியே இருப்பவைகள் பரிசுத்த ஆவியல்ல. ஒரே ஒரு வார்த்தையை மறுதலிக்கும் ஆவி பரிசுத்த ஆவியாகாது. நீ நம்பினாலும் நம்பா விட்டாலும் அதுதான் பரிசுத்த ஆவிக்கு அடையாளம். 139. வோறொரு பெரிய அடையாளத்தைக் கவனியுங்கள். யூதர்கள் இப்போது தம் சொந்த தேசத்திலிருக்கிறார்கள். அவர்களுடைய சொந்த தேசம். சொந்த பணம், ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கத்தினர். சொந்த இராணுவம் - அவர்களிடத்தில் எல்லாம் இருக்கிறது. அவர்களுடைய சொந்த தேசத்தைக் குறித்து இயேசு, "அத்திமரத்திலிருந்து ஒரு உவமையைக் கற்றுக் கொள்ளுங்கள்" என்றார். அவர்கள் தங்கள் தேசத்துக்கு வந்து விட்டார்கள். இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று. 140. யூதர்கள், தங்கள் சொந்த தேசத்திலிருக்கிறார்கள். (எசேக்கியேல் 36:24) இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று. லவோதிக்கேயா சபைக்காலம் - இந்த வேதவாக்கியம் (மத்தேயு:24) இன்றையத்தினம் நிறைவேறிற்று. உலகம் களங்கப்பட்டு இருக்கிறது. (எல்லா துறையிலுமே). தேசத்துக்கு விரோதமாகத் தேசம். பல இடங்களில் பூகம்பங்கள், தேசங்கள் புயல் காற்றால் அசைக்கப்பட்டு இருப்பது, எல்லா இடங்களிலும் பேராபத்து முதலியன - இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று. 141. உலகத்தின் நிலையை நாம் இப்போது பார்த்தோம். பெயருக்கென்று பெயரளவிலுள்ள சபை எங்கே இருக்கிறதென்றும் காண்கிறோம் - சபைச் சங்கங்கள் ஸ்தாபனச் சபைகள் முதலியன எங்கே இருக்கின்றன என்பதைக் காண்கிறோம். தேசங்கள் எங்கே இருக்கின்றன என்றும் காண்கின்றோம். இன்றையத்தினத்தில் வாக்குத்தத்தங்கள் நிறைவேறுகிறதைக் காண்கிறோம். இப்பொழுதே இந்நாளிலே ஆபிரகாமின் ஒரு உயர்தரமான ராஜரீகவித்து எழும்பும். சந்தேகமின்றி தோன்றும் - வாக்குத் தத்தத்தின் ராஜரீகக் குமாரனுக்கு ஒரு ராஜரீக மணவாட்டி, நான் நேற்றிரவு கூறினபடி, அது சாதாரண வித்தாயிருக்காது. அது ஒரு ஆன்மீக வித்தாய் இருக்கும். ஒரு ஆன்மீக மணவாட்டி எழும்புவாள். அது ஆபிரகாமின் ராஜரீகக் குமாரர்களின் ராஜரீக விசுவாசத்தின் ராஜரீக வித்தாய்...... இருக்கும். மணவாட்டி கடைசி நாட்களிலே காட்சியளிப்பாள். சமயமும் இடமும், மல்கியா 4-ம் அதிகாரத்திலிருக்கும் வாக்குத்தத்தத்தின் படி வெளிப்படும். ஜனங்களின் இருதயம் அப்போஸ்தல பிதாக்களிடம் திரும்பும் படியான அதிர்ச்சியைக் கொடுக்கும் ஓர் செய்தி உண்டு 142. எலியாவின் பலத்திலே காட்சியளிக்க எழும்பும் ஓர் மனிதனுண்டு . (மல்கியா 4:5-6 மாற்கு 9:13 வெளி. 10:6) அவன் காட்சியளிக்க எழும்புவான். வனாந்திரத்திலிருந்து வருவான். அவனிடம் ஒரு செய்தி இருக்கும். அந்தச் செய்தி வந்து நேராக வார்த்தையுடன் ஒன்றுபடும். இந்த நேரத்திலே தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். 143. இன்னும் கவனி. இப்பொழுது உங்களை ஒன்று கேட்கிறேன். 1933-ம் ஆண்டு நடந்த சம்பவம் ஜெபர்ஸன்வில் நகரத்திலிருக்கும் உங்களுக்குத் தெரியும். (அப்போது என் வயது இருபது). நான் சுமார் 500 பேருக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருக்கையில், ஒரு தெய்வீக வெளிச்சம் நதியின் அடுத்தப் பக்கம் விழுந்தது”. ஜெப சன் நகரமே, அது என்ன சொன்னது? ஸ்பிரிங் ஸ்டரீட்டி வியந்து வெளியிடப்படும் கோரியர் ஜானல் என்னும் பத்திரிகை (அது லுஸயிஸ்வில் ஹெரால்டு பத்திரிகை என்று நினைக்கிறேன்) அதைக்குறித்து ஒரு கட்டுரையை வெளியிட்டது. அது அஸோஸியேட் அச்சகத்திலிருந்து கனடா தேச வெளியீடுகளில் பிரசுரிக்கப்பட்டது. அதை டாக்டர் லீ வெய்ல் 1933-ம் ஆண்டில் செய்தி தாளிலிருந்து கத்தரித்து வைத்துக் கொண்டார். 144. இது சம்பவித்த சமயத்திலே நான் 17-ம் ஆளுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தேன். (மீதி கதை உங்களுக்குத் தெரியும்). 17-ம் ஆளுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டு இருந்த போது வானத்திலிருந்து ஒரு வெளிச்சம் பிரகாசத்துடன் கீழிறங்கி வந்தது. ஒரு நட்சத்திரம் வானத்திலிருந்து விழுந்தாற்போல் இருந்தது. ஒரு சத்தம் "யோவான்' எப்படி கிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன் சென்றானோ அப்படியே உன்னுடையச் செய்தி அவருடைய இரண்டாம் வருகைக்கு முன் சென்று உலகத்தின் எல்லா பாகங்களுக்கும் போகும்” என்றது. 145. தேவன் அதை வாக்களித்தார், என்ன நடந்தது? இன்றையத்தினம் அது உலகம் முழுவதும் பரவியது. (நான் சிறுவனாக இருந்த போது) தேவன் இறங்கி வந்து அக்கினி ஸ்தம்பத்திலிருந்து பேசினார். வாதன் (என்பவரின் யூடிகாபைக் எனப்படும் தானியக் களஞ்சியத்திலிருந்து நான் தண்ணீர் பிடித்துக் கொண்டு வரும் போது என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். 146. தேவன் என்னிடம், "புகைப்பிடிக்காதே, சாராயம் குடிக்காதே, ஏனென்றால் நீ பெரியவனாகும் போது நீ செய்ய வேண்டிய வேலை ஒன்று இருக்கிறது” என்றார். 147. நான் கண்டதும், கேட்டதும் உண்மை என்று உறுதியாகக் கூறுகின்றேன். தேவன் மோசேயுடனிருந்து அவனுடைய ஊழியத்தை நிரூபித்தது போல, அவர் நதியின் அக்கரையிலே நின்று, "இது சத்தியம்” என்று கூறி நிரூபித்தார். நம் நடுவில் இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறியிருக்கிறது 148. எனக்களிக்கப்பட்டிருக்கும் நிதானித்து அறியும் வரத்தைக் குறித்து அவர் கூறினதை கவனி. ஜனங்களின் மேல் கை வைத்ததும் அவர்களின் இருதயத்தின் இரகசியத்தையும் என்னால் அறியக்கூடும் என்றார். நமது கண்கள் காண இந்த வேத வாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று இவைகள் அவர் செய்த வாக்குத்தத்தங்கள். 149. இந்த வாக்குத்தத்தங்கள் எல்லாம் வாக்குத்தத்தத்தின் தேவனால் நிறைவேற்றப்பட்டு நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன என்பதைப் பார். வாஷிங்டன் டி.ஸி.யிலே கர்த்தரின் தூதனுடைய புகைப்படம் தொங்கவிட்டு இருப்பதைப் பார். அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசாங்கத்தின் கைநாட்டுப் பத்திரிகை புலன் விசாரிக்கும் குழுவின் அதிகாரியான ஜார்ஸ் ஜெ. லா... இந்தப்படத்தை டெக்ளாஸ் நாட்டின் ஹாஸ்ட்டன் நகரத்திலே பரிசோதனை செய்து "உலகம் முழுவதிலும் இந்த தெய்வீக நபர் மாத்திரமே புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறார் என்று கூறினார். பரிசோதனை செய்தவனுங்கூட அவர் உலகத்திலேயும் உன்னதமானவர் என்பதை அறிய வேண்டியதாயிற்று. 150. இஸ்ரவேலரை வனாந்தரத்திலே வழி நடத்தின அக்கினி ஸ்தம்பமே தான் அங்கே அடையாளமாக அந்த சுவரின் மேல் தொங்க வைக்கப்பட்டிருக்கிறது. இன்று நாம் அதைக் காண்கிறோம். நாம் காண்கிறது எகிப்து தேசத்திலிருந்து இஸ்ரவேலரை வழி நடத்தின சந்நிதானமே. அவர் யார்? இந்த வேத வாசகம் இன்றையத் தினம் நிறைவேறிற்று. அவர் கொடுத்தச் செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். 151. மூன்று ஆண்டுகளுக்கு முன் டக்ஸனில் கொடுக்கப்பட்ட தரிசனத்தைக் கவனி. ஐந்து ஆண்டுகளுக்கு முன் அந்தத் தெருவிலே நான் நின்றுக் கொண்டிருக்கையில் அவர் "எந்த நாளில் இந்த நகரம் அந்த வாசலின் முன் ஒரு கம்பத்தை அடித்து நிறுத்துகிறதோ அன்றைக்கு நீ மேற்கு பக்கம் திரும்பு” என்றார். இங்கிருக்கும் சபையார் அந்த கம்பத்தை அறிவார்கள். அப்போது நடப்பட்ட கம்பம். அது உண்மை . 152. கோயன் என்பவரும் இன்னும் சிலரும் அங்கே ஒரு கம்பத்தை நாட்டின் நாளிலே நான் என் மனைவியிடம், "ஏதோ ஒன்று நடக்க இருக்கிறது” என்றேன். 153. "அது என்ன?” என்று கேட்டாள் அவள். 154. நான் போய் என் சிறு புத்தகத்தைப் பார்த்தேன். அது அங்கே குறித்து வைக்கப்பட்டு இருந்தது அந்த நாள் காலையில் 10 மணிக்கு நான் என் அறையில் உட்கார்ந்துக் கொண்டிருந்த போது கர்த்தரின் தூதன் வந்து "டக்ஸனுக்குப் போ, நீ வடகிழக்குப் பக்கம் இருப்பாய். அங்கே ஏழு தூதர்கள் கூட்டமாக வருவார்கள். அவர்களுடைய வருகை உன்னைச் சுற்றிலுமுள்ள பூமியை அதிர வைக்கும்” என்றான். 155. அப்போது அது அப்படி நடந்தது. இங்குள்ளவர்களில் எத்தனை பேருக்கு ஞாபகமிருக்கிறது? அது நடந்த சமயம் அங்கே நின்று கொண்டிருந்த மனிதன் இன்றிரவு இந்தக் கூட்டத்தில் இருக்கிறான். முழு வேதாகமத்திலும் மறைக்கப்பட்ட இரகசியங்களின் ஏழு முத்திரைகளும் உடைக்கப்படும் என்றும் ஏழாம் தூதனின் செய்தியிலே வெளிப்படுத்தின விசேஷம் 10-ம் அதிகாரத்தில் கூறப்பட்டிருப்பவைகள் நிறைவேறும் என்றான். உங்கள் கண்கள் காண இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று. 156. சென்ற வருடம் அதே இடத்தில் நின்று கொண்டிருந்த நாங்கள் (இங்கே இருக்கும் உட்டு அவர்களும் நானும்) அந்த குன்றின் மேல் ஏறினோம் - அவருடைய மனைவி வியாதியாயிருந்த வருத்தத்தில் இருந்தோம். அப்பொழுது பரிசுத்த ஆவி "இங்கே விழுந்து கிடக்கும் ஒரு கற்பாறையை எடுத்து காற்றிலே தூக்கி எறி. அது கீழே விழும் போது "கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், பூமியை நியாயத்தீர்ப்பு தாக்கும். தேவனுடைய புயத்தை சில மணி நேரங்களில் காண்பாய் என்று அவனுக்குச் சொல்” என்றது. 157. (இன்றிரவு இங்கே இருக்கும்) உட்டு அவர்களுக்கு இது நிறைவேறினதைக் குறித்துச் சொன்னேன். அடுத்த நாள் காலையிலே இது நிறைவேறின் போது, அங்கே பத்து அல்லது பதினைந்து மனிதர்கள் இருந்தார்கள் - அது நிறைவேறின் போது தேவன் மலையைத் தோல் உரிப்பது போல் வந்த புயல்காற்றிலே வந்து மரங்களின் மேல் பாகங்களைத் தளரச் செய்து மூன்று பலமான வெடிகளை உண்டாக்கி "மேற்கு கடற்கரைப் பக்கம் நியாயத் தீர்ப்பு போகிறது” என்றார். 158. இரண்டு நாட்களுக்குப் பிறகு அலாஸ்கா நகரம் ஏறக்குறைய பூமியிலே புதைக்கப்பட்டது அத்தினத்திலிருந்து அந்த கடற்கரை தேவனுடைய நியாயத் தீர்ப்பில் சிக்குண்டு எரிமலை போன்ற குமுறுதலில் மேலும் கீழுமாக அலசப்படுகிறது 159. ஒரு இருப்புத் திரையுண்டு, ஒரு மூங்கில் திரையுண்டு, ஒரு பாவத்திரையுண்டு. நாகரீகம் சூரியனுடன் பிரயாணப்படுகிறதைப்போல சுவிசேஷமும் பிரயாணப் படுகிறது. சூரியனைப்போல அது கிழக்கிலிருந்து மேற்குப் பக்கம் வந்தது. இனி முன் செல்லாது. சென்றால் அது மறுபடியும் கிழக்குப் பக்கம் திரும்பும். 160. தீர்க்க தரிசி உரைத்தபடி (சகரியா 14:7) "ஒரு நாள் உண்டு, அதைப் பகல் அல்லது இரவு என்று சொல்ல முடியாது" - ஒரு இருண்ட நாள், மிக்க மழையும் மந்தமுமான நாள், புரிந்துக் கொள்வதற்கு இது போதும் - எந்த சபையைச் சேரலாம், எந்த புத்தகத்தில் உன் பெயரை எழுதலாம் என்றறிய, ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்ச முண்டாகும். இந்த வேத வாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று. 161. அந்த... கிழக்கிலே உதித்த அந்த சூ-ரி-ய-னே மேற்கில் அஸ்தமிக்கும் சூ-ரி-ய-னா-ய் இருக்கிறது. கிழக்கிலே வந்த தேவனுடைய குமாரனே (தம்மை மாம்சத்தில் தேவனென்று நிரூபிக்கவே) மேற்குக் கோளாரத்தில் வந்த தேவனுடைய குமாரன் (தம்மை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்பதை சபையிலே நிரூபிக்கிறார்) குமாரனின் சாயங்கால வெளிச்சம் வந்திருக்கிறது. நாம் காண இந்த வேத வாக்கியம் இன்றையத் தினம் நிறைவேறிற்று. 162. இந்த ஆபிரகாமின் காலத்திலே நாம் எங்கே இருக்கிறோம்? நாம் இருக்கும் இந்த சமயத்திலே, நாம் வாழும் இந்த வேளையிலே, நாம் எங்கே இருக்கிறோம்? எல்லா தரிசனங்களும் நிறைவேறியிருக்கின்றன. இங்கே இருக்கும் நமது நேச ஊழிய நண்பனாகிய ஜூனியர் ஜேக்ஸன் நம் சபையுடன் சேர்ந்திருக்கும் சபையின் ஊழியன், ஒரு நாள் இரவு ஓடி வந்து, "சகோதரன் பிரென்காம், நான் கண்ட ஓர் கனவு என்னைச் சங்கடப்படுத்துகிறது. எல்லா சகோதரரும் ஒரு குன்றின் மேல் ஏறுவதைக் கண்டேன். குன்றின் மேல் நீர் சில கடிதங்களை வைத்துப் போதித்துக் கொண்டிருந்தீர். அந்தக் கடிதங்கள் அப்பொழுதே ஒரு பாறையின் மேல் எழுதப்பட்டது போலக் காணப்பட்டது. நீர் போதித்து முடித்தப்பின் எல்லாம் முடிந்த பின்னர் எங்களை நோக்கி, "அருகில் வாருங்கள்” என்றீர். நாங்கள் எல்லாரும் வந்தோம். நீர் கைநீட்டி ஏதோ ஒன்றை எடுத்தீர். அது ஒரு கடப்பாறையைப் போல இருந்தது. சவுக்கை சுற்றுவது போல அதைச் சுற்றி இந்தக் குவியலை மேல் பக்கமாய் திறந்தீர். அது திறக்கப்பட்ட போது அந்த கருங்கற் பாறையின் மேல் ஒன்றும் எழுதப்பட்டு இருக்கவில்லை. நீர் எங்களை அந்தப் பாறையைப் பார்க்கச் சொன்னீர். நாங்களெல்லாரும் பார்க்க ஆரம்பித்தோம். நான் திரும்பிப் பார்க்க நீர் வெகு வேகமாக மேற்குப் பக்கம் போவதைக் கண்டேன்" என்று கூறினதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? எத்தனை பேருக்கு இது ஞாபகமிருக்கிறது? 163. பரிசுத்த ஆவியானவர் இதை வெளிப்படுத்தும் வரை நான் அங்கேயே நின்றேன். பின்னர் நான், "முழு வேதாகமும் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறுதல், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறுதல் ஆகியவைகளின் மூலம் வெளிப்பட்டு இருக்கிறது. ஆனால் அதன் உட்புறம் இரகசியங்கள் மறைக்கப்பட்டு இருக்கின்றன. ஏனென்றால் முழு வேதாகமும் ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டு இருக்கிறது. அதை அறிய நான் அங்கே போக வேண்டும்” என்றேன். 164. அன்று காலையிலே அந்த ஏழு தூதர்களும் வந்த போது பூமியை வெடிக்க வைத்தார்கள். பாறைகள் நான்கு பக்கமும் பறந்தன. ஏழு தூதர்களும் நின்று, "நீ எங்கிருந்து வந்தாயோ அங்கே, ஜெபர்ஸன் ஊருக்குத் திரும்பு, ஏனென்றால் ஏழு இரகசியங்களைக் கொண்ட ஏழு முத்திரைகளும் உடைக்கப்படும்” என்றார்கள். 165. இன்று நாம் வாழ்ந்து வந்துள்ள இடம் இதுவே. நாம் சர்ப்பத்தின் வித்தை கண்டு கொண்டோம். சில நாட்களுக்குள் தேவனுக்குச் சித்தமானால், விவாகமும் விவாகரத்தும் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்வோம். இவைகளெல்லாவற்றையும் தேவன் திறந்து வெளிப்படுத்தினார். பூமியின் அஸ்திபாரத்தின் நாள் முதல் மறைக்கப்பட்ட எல்லா இரகசியங்களையும், எல்லா முத்திரைகளையும் வெளிப்படுத்தினார். அவருடைய சந்நிதானத்தின் ஆசீர்வாதத்தை அனுபவித்தோம். அது உண்மை . இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம்... 166. "வெளிச்சமான வட்டம் டக்ஸன் போயானிக்ஸ் நகரங்களின் மேல் காற்றில் செல்கிறது" என்று "லைப்” என்னும் இருவாரப் பத்திரிகை இதைக் குறித்து ஒரு கட்டுரையை வெளியிட்டது. இது சம்பவிப்பதற்கு சுமார் ஒரு வருடத்துக்கு முன் இது எப்படி நடக்குமென்று - ஒரு முக்கோணத்தைப் போல் இருக்குமென்று - நான் கூறினபடியே நடந்தது. ஆலயத்திலே அந்த புகைப்படம் மாட்டப்பட்டு இருக்கிறது. அந்த பத்திரிகையைப் படிக்கிறவர்கள் அதைக் கண்டிருப்பீர்கள். நான் கூறினபடியே வந்தது. அது இருபத்தேழு மைல் உயரமாகவும் முப்பது மைல் அகலமாகவும் இருந்ததாகக் கூறுகின்றனர். என்ன நடந்ததென்று அவர்களால் அறியக்கூடவில்லை. அது இரகசியமாக வந்தது. இரகசியமாகப் போய் விட்டது. 167. பேதுரு, யாக்கோபு, யோவான் - இம்மூவரும் மலைச்சிகரத்திலே நின்றது போல (மத்.17:1-9) சகோதரன் பிரெட் சாச்மேனும், சகோதரன் ஜீன் நார்மேனும், நானும் மலையின் மேல் நின்று இந்த சம்பவம் நடந்ததைக் கண்டோம். ஈரமில்லாத ஈர வாயும் இல்லாத மூடுபனியுண்டாக்க அங்கே ஒன்றுமில்லாத ஆகாயத்திலே அது தொங்குவதைக் கண்டோம். அங்கே அது எப்படி வந்ததோ அது எப்படி வந்ததோ அது தேவனுடைய ஏழு தூதர்கள் தங்கள் செய்திகளைக் கொடுத்து விட்டுப் போகும் காட்சியாயிருந்தது. இன்றையத் தினம் அவர்களின் தாகத் தரிசனம் நம் மத்தியிலே நிறைவேறிற்று இந்த வேத வாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று 168. கவனி. புயல், காற்று மேற்கு கடற்கரைப் பக்கம் அடித்தது - ஏழு முத்திரைகள் உடைக்கப்பட்டன. அந்நாட்களில் இருந்தவர்கள் ஏமாந்தது போல இதை ஒன்றுமில்லை என்றெண்ணி ஏமாறாதீர்கள். இப்பொழுது நம்முடைய காலத்தில் நிறைவேறும் வேத வாக்கியங்களைக் கூர்மையாகக் கவனித்து கண்டு கொள்ளுங்கள். 169. இந்த நாளைக் குறித்தும் நாம் வாழும் சமயத்தைக் குறித்தும் வேத வாக்கியம் என்ன கூறுகிறது? இவைகளெல்லாவற்றையும் எடுத்துப் பேச சமயமில்லை. ஆனால் ஆராதனையை முடிக்கும் முன் இந்த ஒரு சமயத்தை குறித்து பேசப் போகிறேன். பரிசுத்த லூக்கா 17-ம் அதிகாரம் 30-ம் வசனத்திலே இயேசு கூறின் படி - இயேசு கிறிஸ்து, வார்த்தையாகிய அவர் (நீ அதை விசுவாசிக்கிறாயா?) தாமே வார்த்தையாயிருந்து மாம்சமான இயேசு கிறிஸ்து கூறியதாவது: அவர் கடைசி நேரத்திலே வார்த்தை என்னவாயிருக்குமென்றும், உலக முடிவுக்கு அடையாளம் என்னவாயிருக்குமென்றும் கூறி ராஜ்யத்துக்கு விரோதமாக ராஜ்யம் எழும்பும் என்று கூறி, "சோதோமின் நாட்களில் எப்படி இருந்ததோ அப்படியே மனுஷ குமாரன் வெளிப்படும் நாளிலும் நடக்கும்” என்றார். (லூக்கா 17:23-30). 170. இயேசு உலகத்துக்கு வந்த போது அவர் மூன்று குமாரர்களின் நாமத்திலே வந்தார். மனுஷ குமாரன் (ஒரு தீர்க்கதரிசி) தேவனுடைய குமாரன், தாவீதின் குமாரன். அவர் பூமியிலே வாழ்ந்தார். தம்மை அவர் தேவனுடைய குமாரன் என்று சொல்லிக் கொள்ளாமல் "மனுஷ குமாரன்” என்றார். யெகோவா தாமே தமது தீர்க்கதரிசிகளில் எசேக்கியேலை மாத்திரம் “மனுபுத்திரன்" ("மனுஷ குமாரன்" - SON OF MAN) என்று அழைத்தார் என்றால் அவர் வேத வாக்கியத்தை நிறைவேற்றத் தீர்க்கதரிசியாக வந்தார் என்று பொருள். (தமிழ் வேதாகமத்தில், தேவன் எசேக்கியேலை "மனுபுத்திரன்" என்று அழைத்ததாகவும், இயேசு தம்மை "மனுஷ குமாரன்" என்று சொல்லிக் கொண்டதாகவும் எழுதப்பட்டிருக்கக் காண்கிறோம் - எசேக்கியேல் 12:6 யோவான் 1:15. ஆங்கில வேதாகமத்தில் தேவன் எசேக்கியேலை SON OF MAN என்று 100 தடவை அழைத்ததாகவும் இயேசு தம்மை SON OF MAN என்று 86 தடவை அழைத்துக் கொண்டதாகவும், மற்றவர்கள் இவரை இரண்டு தடவை இப்படி அழைத்ததாகவும் (யோவான் 12:34) எழுதப்பட்டு இருக்கிறது. அதாவது தமிழில் SON OF MAN என்பதற்கு இரண்டு வித மொழி பெயர்ப்பை காண்கிறோம் - "மனுபுத்திரன்”, மனுஷகுமாரன்”. தமிழில் இந்த வித்தியாசம் ஏனோ? அல்லாமலும் "மனுபுத்திரன்" என்பதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் HUMAN SON என்றல்லவா பொருள்படுகிறது? நிற்க, எசேக்கியலும் இயேசுவும் SON OF MAN என்று குறிக்கப்பட்டது ஞாபகம் இருக்கட்டும். எபிரேய மொழியிலே இவ்விருவரும் பென் ஆதம் BEN ADAM என்று குறிக்கப்பட்டு இருக்கிறார்கள். பென் ஆதம் என்றால் ஆதாமின் குமாரன் என்று பொருள். ஆனபடியினாலே, இங்கே ஒரு வேத விளக்கத்தைக் காண்கிறோம். எசேக்கியேலை தேவன் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு அடையாளமாக ஆக்கியிருந்தார் - எசேக்கியல் 12:6. அவன் என்ன அடையாளம்? இயேசு உலகத்துக்கு வந்து தம்மை "மனுஷகுமாரன்" SON OF MAN என்று சொல்லிக் கொள்ளும் போது, அவர் எசேக்கியேலைப் போல ஒரு தீர்க்கதரிசியாய் மாமிசத்தில் வந்தார் என்ற அடையாளத்தை இஸ்ரவேல் வம்சத்தார் கண்டு கொள்ளவே அவனை மனுஷகுமாரன் SON OF MAN என்றழைத்து அவனை ஓரு அடையாளமாக்கினார். வேத விளக்கம் இவ்வாறு மனித விளக்கம் பலவாறு - தமிழாக்கினவன்.) 171. இரண்டாயிரம் ஆண்டுகளாக அவர் தேவனுடைய குமாரன் என்று அறியப்பட்டு வருகிறார். அதாவது ஆவியானவர் ஓராயிரம் வருஷ ஆட்சியிலே அவர் சிங்காசனத்தில் உட்காரும் போது தாவீதின் குமாரனாயிருப்பார். வேத வாக்கியத்தில் விசுவாசம் வைக்கும் நமக்கு இது தெரியும். 172. நாம் வாழும் இந்த கடைசி சபைக் காலத்திலே, சோதோமில் எப்படி நடந்ததோ அப்படி நடக்கும் போது மனுஷகுமாரன் மறுபடியும் வெளிப்படுவார் என்று இயேசு கூறினார். சரித்திர ஆதாரத்தோடு அவர் கூறினதைக் கவனி. அவர், "நோவாவின் நாட்களிலே முதலாவது அவர்கள் புசித்து குடித்தார்கள். பெண் கொண்டு கொடுத்தார்கள்” என்றார். இன்னும் அவர் "சோதோமிய காலத்தைப் போலுள்ள காலத்தில் கடைசியாக மனுஷகுமாரன் வருவார்” என்றார். ஏனென்றால், நோவாவின் காலத்தில் யூதரைச் சந்தித்தார் சோதோமிலே அவர் அஞ்ஞானிகளைச் சந்தித்தார். அங்கே அவர்களைத் தண்ணீரில் மூழ்க வைத்து நியாயந் தீர்த்தார் இங்கே அஞ்ஞானிகளைச் சோதேமிலே சுட்டெரித்தார். அது உண்மை. அஞ்ஞான உலகம் அங்கே சுட்டெரிக்கப்பட்டது. 173. ஆகவே, மனுஷகுமாரன் வெளிப்படும் போதும் அப்படியே நடக்கும். இனி ஜலப்பிரளயமல்ல. அது அக்கினியாயிருக்கும். வாசித்த போது, நாம் வாசிக்கும் உபாகமம் 23-ம் அதிகாரத்தையே இயேசுவும் வாசித்தார். 174. இப்பொழுது முன் கூறப்பட்ட நிலையை நாம் ஏற்றுக் கொள்கிறோம். உலகம் சோதோமிய நிலையிலுள்ளது. சோதோமியர், சோதோமிய நிலை. நாம் ஒவ்வொருவரும் அதை "ஆமென்” என்கிறோம். அதை நம்புகின்றோம். மிக்க நல்லது லவோதிக்கேயாவின் ஆத்மீக நிலையைக் குறித்தும், சாதாரண சபையைக் குறித்தும் நாம் "ஆமென்” என்போம். இந்த சபையின் அடையாளத்தையும் நாம் கண்டுணர்கிறோம். ஒவ்வொரு அடையாளமும் அச்சபையிலிருக்கிறது என்று நமக்குத் தெரியும். சபையானது லவோதிக்கேயாவிலுள்ளது. இது நமக்குத் தெரியும். உலகம் சோதோமின் நிலையிலுள்ளது என்றும் நமக்குத் தெரியும். அது சரிதானே? நாம் அதை ஏற்றுக் கொள்வோம். வாக்குத்தத்தத்தின் புத்திரனுக்காகக் காத்துக் கொண்டிருந்த ஆபிரகாமின் அடையாளத்தைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது வேறொரு அடையாளம். அவனோடு இல்லாதவர்கள் சோதோமின் நிலையில் இருந்தார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் அவர்களுடையத் தூதுவனை யுடையவர்களாயிருந்தார்கள். ஆபிரகாம் நாளுக்கு நாள் - ஏறக்குறைய ஒரு முடியாத காரியம் நடக்குமென்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். சாராள் 90 வயதாகவும் அவன் 100 வயதாகவும் இருந்தபோதும் வாக்குத்தத்தம் நிறைவேற அவன் இன்னும் காத்திருந்தான். அவனுக்கும் ஒரு தூதுவன் இருந்தான். எல்லாரும் கேலி செய்தபோதிலும் அவன் குமாரனுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். அதைப் போலவே ஒவ்வொரு விசுவாசியும் வாக்குத்தத்தத்தின் குமாரன் திரும்பி வர காத்துக் கொண்டிருக்கிறான். 175. குமாரன் வருவதற்கு முன் அவனுக்கு ஒரு அடையாளம் கொடுக்கப்பட்டு இருந்தது. தகப்பனாகிய ஆபிரகாமுக்கு சாதாரண குமாரன் பிறக்குமுன் ஒரு அடையாளம் கொடுக்கப்பட்டு இருந்தபடியே வரப்போகும் குமாரனுடைய அடையாளம் ராஜரீக குமாரனுக்காக காத்திருக்கும் ஆபிரகாமின் ராஜரீக வித்துக்கு வெளிப்படுத்தப்பட வேண்டுமல்லவா? அது சரிதானே? இதைக் குறித்து இயேசு லூக்கா 17:30-லே கூறியிருக்கிறார். சோதோமின் அழிவுக்கு முன் அவர் சோதோமின் நாட்களிலே செய்தது போல, அந்த நாட்கள் இக்காலத்துக்குத் திரும்பிவருமுன், மனுஷகுமாரன் வெளிப்படுவார் என்று இயேசு கூறினார். இப்பொழுது நாம் ஒரு அடையாளத்தை எதிர்பார்க்கிறோம். 176. இப்போது....? எடுத்துக் கொள்வோம்... சோதோமில் இருந்த நிலையை எடுத்துக் கொள்வோம். உலகத்தார் சோதோமின் பாவத்திலே மூழ்கி இருந்தார்கள். சில காலத்துக்கு முன் திரைப்பட டைரெக்டர்கள் சோதோம் என்னும் ஒரு திரைப்படத்தை வெளியிட்டர்கள். நானும் அதைப் பார்த்தேன் என்று நினைக்கிறேன். அதை நீங்களும் பார்ப்பீர்களானால், நடிகர்கள் சோதோமியர் உடுத்தியிருந்த மாதிரியே உடுத்தியிருக்கக் காண்பீர்கள். நீங்களும் அதை ஒரு தடவைப் பாருங்கள். அது இன்று அமெரிக்கா தயார் செய்த நல்ல படங்களில் ஒன்றாம். தயாரித்தது ஹாலிவிட்டு, சோதோமியரின் குடி வெறியாட்டம், உடை, ஸ்தாபன சபைக் கூட்டங்கள், பக்தர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள். எல்லாமே சரியானபடி சோதோமின் பாவ விளையாட்டு. 177. லோத் என்னும் பேர் கொண்ட ஒருவன் சோதோமிலே சாட்சியாக இருந்தான். இதைக் கவனி. அவன் ஆபிரகாமுக்கு அண்ணன் அல்லது தம்பி பிள்ளையாக இருந்தான். ஆபிரகாம் சோதோமுக்குப் போகவில்லை. அவனும் அவனுடனிருந்தக் கூட்டமும் - பனிரெண்டு ராஜாக்களையும் அவர்களின் தரைப்படைகளையும் நிர்மூலமாக்கத்தக்க ஒரு கூட்டம் அவனுடன் இருந்தது. அவனும் அவனுடையப் பெரியக் கூட்டமும் போகவில்லை. அவனுக்கு எல்லாமே எதிர்மாறாக நடந்தேறிய நாள் ஒன்றில் அவன் ஒரு சிந்தூர மரத்தின் கீழ் உட்கார்ந்துக் கொண்டு இருந்தான். யாரும் அவனுடன் தொடர்பு கொள்ளவில்லை. ஆனாலும் அவன் வாக்குத்தத்தத்தை விசுவாசித்து வாழ்ந்தான். நான் இதை முடிக்கும் முன் இதை கவனமாகக் கேள். அவன் உட்கார்ந்துக் கொண்டிருக்கையில் மூன்று பேர் அவனை நோக்கி வந்தார்கள். வெளியே வாருங்கள் என்றுச் சொல்லி இரண்டு பேர் சோதோமிலே லோத்துக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள். அது சரிதானே? ஆனால் ஒருவர் ஆபிரகாமுடன் தங்கினார். கவனி. ஆபிரகாமோடு தங்கினவர் தேவனே. மற்ற இருவர் தேவ தூதர்கள். 178. அவர்கள் சோதோமிலே அற்புதங்களைச் செய்யவில்லை. அவர்களைக் குருடர்களாக்கினார்கள். சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது எப்போதுமே ஜனக் கூட்டத்தைக் குருடர்களாக்கியது. 179. அந்த நாள் எப்படி அமைந்திருக்கிறது என்று பார். ஒரு சாதாரண சபை. (நான் நேற்றிரவு கூறினது போல) அது எப்போதுமே தேவனை மூன்று ஆட்களாகக் காட்டுகின்றது. மூன்று தரத்தார் இருந்தனர். சோதோமியர். லோத்தியர், ஆபிரகாமியர். இன்றிரவும் உலகம் அப்படியே அமைந்துள்ளது. அதே நிலையிருக்கிறது. 180. நான் உங்களிடம் சில காரியங்களைக் கேட்கட்டும். இப்போது இந்த அமைப்பைப் பார். ஆபிரகாம் தன்னிடம் வந்த மனிதனை ஏலோஹி என்று சொல்லி அவருடன் பேசினான். எலோஹிம் என்னும் எபிரேய வார்த்தைக்கு எல்லாவற்றையும் தாமே பூர்த்தி செய்துக் கொள்ள கூடியவர். ஆதியந்தமில்லாதவர் எலோஹிம் தேவன் தாமே என்று பொருள். 181. ஆதியிலே... ஆதியாகமம் 1-ம் வசனம் "ஆதியிலே தேவன்...'' என்கிறது. அங்கிருக்கும் எபிரேய வார்த்தையை, இன்னும் சரியாக கிரேக்கு வார்த்தையை விளங்கிக் கொள்ளுங்கள்: "ஆதியிலே எலோஹிம் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். 182. ....? இந்த மனிதனை - அவனை எலோஹிம் என்று பேரிட்டு அழைத்தான். அவன் அப்படி அழைத்ததேன்? தேவன் தம்மை மானிட சரீரத்திலே வெளிப்படுத்தினார். ஆபிரகாமோடு உட்கார்ந்தார். கன்றின் மாமிசத்தை சாப்பிட்டார். பால் குடித்தார். அப்பம் தின்றார் - தேவன் தாமே ஆபிரகாமின் முன் நடந்து மறைந்தார் ஆனால் அவர் அவனுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். கவனி. அவருடைய முதுகு கூடாரத்தின் பக்கம் இருந்தது. சில நாட்களுக்கு முன் அவனுடைய பெயர் ஆபிரகாம் என்று இருந்தது. சாராளின் பெயர் சாராய் என்றிருந்தது. பின்னர் சா-ரா-ய் ஆனது. ஆ-பி-ரா-ம், ஆ-பி-ராகா-ம் ஆனது. ஆபிரகாம் என்றால் திரளான ஜாதிகளுக்குத் தகப்பன் என்று பொருள். (ஆதி 4-5) இது அடையாளம். 183. இப்போது குறிப்பாக கவனியுங்கள். நாம் வாழும் சமயத்தின் அமைப்பைக் காணப் போகிறோம். நாம் இந்த அமைப்பைக் கண்டுகொள்ள வேண்டும் என்று இயேசுவே கூறினார். மற்ற எல்லா அமைப்பையும் திட்டவட்டமாகக் கண்டோம். இப்போது ராஜரீகவித்தைக் காண்போமாக. இந்த வித்து வந்த அமைப்பை கண்டார்கள். என்று பார்ப்போம். 184. "ஆபிரகாமே, உன் மனைவியாகிய சாராள் எங்கே?" என்று இந்த மனிதன் கேட்டார். 185. "உமக்குப் பின்பக்கம் இருக்கும் கூடாரத்திலே இருக்கிறாள்” என்றான் ஆபிரகாம். 186. அவர் அவளை ஒரு போதும் கண்டதில்லை. அவளுடைய பெயர் சாராள் என்று அவருக்கு எப்படித் தெரிந்தது? அவனுடைய பெயர் ஆபிரகாம் என்று அவருக்கு எப்படித் தெரிந்தது? ஆபிரகாமே உன் மனைவியாகிய சாராள் எங்கே? 187. "உமக்குப் பின்பக்கமிருக்கும் கூடாரத்திலே இருக்கிறான்” என்றான். 188. அப்போது அவர், "நான் (நான் என்பது ஒரு கட்டுப் பெயர்)..... நான் என்னுடைய வாக்குத்தத்தத்தின் படி உன்னை வந்துப் பார்க்கப் போகிறேன். உன் மனைவி அந்த குமாரனைப் பெற்றெடுப்பாள். நீ என்னில் விசுவாசித்தாய். நான் அதை நிறைவேற்றப் போகிறேன்” என்றார். 189. பின்புறம் இருந்த கூடாரத்திலே சாராள் (ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள் அல்லது மறைவிலிருந்து இரகசியங்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள்). கூடாரத்திலிருந்து கேட்டுத் தன் சட்டையின் கைத்துணியால் வாயை மூடி நகைத்து, "இப்பொழுது நான், நான் ஒரு கிழவியாயிற்றே, என் ஆண்டவரும் கிழவராயிற்றே. நூறு வயதாயிற்றே இனியுமா இன்பம் காணப் போகிறோம்? ஏன் பல பல வருடங்கள் ஆயிற்றே. இப்படி ஒன்றும் நடக்கவில்லையே” என்றாள். 190. அந்த மனிதன், ம-னி-த-ன், மனித சரீரத்திலே, சாதாரண மனிதனைப் போல உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருடைய உடையின் மேலும் கால்களின் மேலும் தூசி இருந்தது. ஆபிரகாம் அதைக் கழுவினான். தேவன் சுற்றிலும் பார்த்து விட்டு, "இன்னின்ன பிரகாரம் சொல்லி சாராள் ஏன் சிரித்தாள்?” என்று கேட்டார். அவர் தெரிந்துக் கொண்டார். அறியும் திறனால் சாராளின் எண்ணங்களை அறிந்தார். அவள் பின்பக்கம் இருந்த கூடாரத்திலே இருந்து போதிலும் அவர் அறிந்தார். சரிதானே? 191. ஆபிரகாமின் ராஜரீக வித்து (மனுஷ குமாரன்) உலகத்துக்கு வந்து என்ன அடையாளத்தைக் காட்டினார்? 192. சீமோன் ஒரு நாள் அவரிடத்தில் வந்தான். அந்திரேயா அவனை அழைத்து வந்தான். அவனைப் பார்த்து அவர், உன் பெயர் சீமோன். நீ யோனாவின் மகன் என்றார். அது அவனை ஒரு விசுவாசியாக்கினது பார்த்தாயா? (யோவான் 1:42). 193. பிலிப்பு போய் நாத்தான் வேலை அழைத்து வந்தான். அவன், "எங்களிடத்திலிருக்கும் ஒரு மனிதனை வந்து பார். நாங்கள் கண்டுக் கொண்டோம். நசரேயனாகிய இயேசு, யோசேப்பின் குமாரன்" என்றான். 194. "ஒரு நிமிஷன் இது. அந்த வைராக்கியங்கொண்ட பட்டணத்தில் யாதொரு நன்மையும் உண்டாகக் கூடுமா?” என்றான் (யோவான் 1:45-0). 195. "வந்து பார்” என்றான் அவன். 196. பிலிப்பு நாத்தான்வேலுடன் இயேசுவினிடம் வந்த போது, இயேசு அவனைப் பார்த்து, "இதோ கபடமற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார். 197. "போதகரே, நீர் என்னை எப்படி அறிவீர்?” என்றான். 198. "பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும் போது உன்னைக் கண்டேன்" என்றார். 199. "ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். 200. சீஷர்களை போஜன "பதார்த்தங்கள்" வாங்க ஊருக்குள் அனுப்பி விட்டு, தண்ணீரெடுக்க வந்த ஒரு ஒழுக்கங்கெட்ட ஸ்தீரியுடன் கிணற்றின் அருகிலே சம்பாஷிக்கலானார். ஒரு அழகான சிறு காட்சி) அவள் தண்ணீரெடுக்க வந்த போது அவர், "ஸ்தீரியே, குடிக்கிறதற்கு கொடு” என்றார் (யோவான்.4: 8-26) 201. "நீர் கூறுவது வழக்கத்துக்கு விரோதமாக இருக்கிறதே. நாங்களோ விலக்கப்பட்டவர்கள். யூதர்களாகிய நீங்கள் சமாரியராகிய எங்களிடம் கொள்வதும் கொடுப்பதும் இல்லையே. எங்களுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லையே” என்றாள் அவள். 202. "ஸ்திரியே, நீ யாரிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று அறிவாயானால், நீ என்னிடத்தில் குடிக்கக் கேட்டிருப்பார் நான் கொடுக்கும் தண்ணீரை நீ குடித்தால், தண்ணீரெடுத்து மறுபடியும் இங்கே வரமாட்டாய்” என்றார் இயேசு. 203. அவளுடைய நிலையை அறிந்தவராய் அவர் அவளை நோக்கி, "உன் கணவனைக் கூட்டிக் கொண்டு வா” என்றார். 204. "எனக்குக் கணவன் யாருமில்லை ” என்றாள். 205. "நீ உண்மையைச் சொன்னாய். ஐந்து முறை திருமணம் செய்தாய். ஆனால் இப்போது இருக்கிறவன் உன் கணவன் அல்ல என்றார். 206. ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்பதைக் கண்டு கொண்டேன் மேசியா வரும் போது இவைகளையெல்லாம் எங்களுக்குக் கூறுவார்” என்றாள் அவள். 207. "நானே அவர்” என்றார். 208. அதைக் கேட்டதும் அவள் தன் பட்டணத்துக்கு ஓடினாள். பட்டணத்தார்களிடம் அவள், "நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்ன ஒரு மனுஷனை வந்து பாருங்கள். நாம் எதிர்பார்த்த மேசியா இவர்தான் அல்லவா?” என்று கூறினான். 209. அவர் இப்படி தம்மை சமாரியருக்கும் யூதருக்குமே வெளிப்படுத்தினார். ஆனால் அஞ்ஞானிகளுக்குத் தம்மை வெளிபடுத்தவில்லை என்பதைக் கவனி. அந்நாட்களிலே அஞ்ஞானிகளாகிய நாம் விக்கிரக ஆராதனை செய்கிறவர்களாய் கதைகளை கட்டி விக்கிரகங்களை வணங்கி வந்தோம். நாம் மேசியாவை எதிர்பார்க்கவில்லை. அவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறவர்களுக்கே தம்மை வெளிப்படுத்துகிறார். நாம் அவர் வாக்கை காத்துக் கொண்டிருக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். சபையானது தான் அவருக்காக காத்திருந்ததாகக் கூறினது. ஆனால் அவள் அவர்களிடம் வந்தபோது, அவன் ஒரு பிசாசு அவன் ஒரு ஜோசியக்காரன் பெயல்செபூல் என்று தூஷித்தார்கள் 210. மனிதருக்கு எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும் என்றார் இயேசு. ஏனென்றால் அதுவரை அவர் மரிக்கவில்லை. "ஆனால் ஒரு நாள் பரிசுத்த ஆவி வரும். அதற்கு விரோதமாக ஒரு வார்த்தை பேசினாலும் அது அவர்களுக்கு மன்னிக்கப்படாது” என்றார். அந்த நாள் இந்த நாள்ே இப்பொழுது வார்த்தை முழுவதுமாக வெளிப்படுகிறது. இதற்கு விரோதமாக ஒரு வார்த்தை பேசினாலும் அது இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாது. 211. அது ஆபிரகாமின் ராஜரீக வித்தாய் இருந்தது. (ஆபிரகாமோடு மனித ரூபத்தில் உட்கார்ந்திருந்த அடையாளத்தை நிறைவேற்ற) அவர் தம்மை மனுஷகுமாரனாக வெளிப்படுத்தும் போது, இந்நாளிலும், சென்ற காலத்தில் தேவனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆபிரகாமின் அந்த ராஜரீக வித்தே வெளிப்படுகிறது என்று நிரூபிப்பாய். சோதோமின் நாட்களில் எப்படி இருந்ததோ அப்படியே மனுஷகுமாரன் வருகையிலும் இருக்கும். ஆமென். அந்த நாள் இதுவே என்றால், இந்த வேதவாக்கியம் நிறைவேறிற்று 212. இன்று நாம் இருக்கும் அமைப்பைப் பாருங்கள். தேவனுடைய குமாரன் இருக்க வேண்டிய சபையைப் பாருங்கள். மப்பும் மந்தமுமான நாளை பாருங்கள். எல்லா தீர்க்கதரிசனங்களையும் பாருங்கள். இப்போது ஒரு விசித்திரமான அடையாளம் இன்றைய அமைப்பு சோதோமிய அமைப்பாயிருக்கிறது என்றால், நம்முடைய விருந்தினர் வர நாளாகி விட்டது 213. அங்கே மூன்று புருஷர்கள் சேர்ந்து வந்தார்கள் - பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட மூன்று முக்கியமான புருஷர் வந்தார்கள் - நாம் ஏற்றுக் கொள்வோம் - மூன்று பேர், ஒருவர் ஆபிரகாமுடன் தங்கினார்: மூன்று பேர் வந்தனர். ஆனால் ஒருவர்தான் ஆபிரகாமுடன் தங்கினார். மற்றவர்கள் சோதோமுக்குச் சென்றார்கள். அது சரிதானே? ஆபிரகாம் மாற்றப்பட்ட பெயருடையவனாயிருந்தான். ஆபிரகாமிலிருந்து ஆபிரகாம் ஆனான். உண்மைதானே? இந்நாள் வரை. உலக சபைக்கு ஒரு பிரசங்கியும் - (Ham) என்று முடியும் பெயருடன் அனுப்பப்படவில்லை - சரித்திரத்திலே ஒரு தடவை கூட இல்லை . பில்லி கிரகாம். அது சரிதானே? G-K-A-H-A-M- ஆறு எழுத்துக்கள் (ஆபிரகாம்) A-B-R-A-H-A-M - ஏழு எழுத்துக்கள் ஆனால் G-R-A-H-A-M ஆறு எழுத்துக்களால் ஆனது. இது உலகம் - மனிதன் கண்டு கொண்டீர்களா? (எனவே ப்ரன்ஹாம் என்று எழுதுவது தவறு. அது B-R-A-N-H-A-M என்று - ப்ரன்ஹாம் என்று ஏழு எழுத்துக்களால் எழுதப்பட வேண்டும். A-B-R-A-H-A-M ஏழு எழுத்துக்களால் எழுதப்பட்டு இருப்பது போல B-R-A-N-H-A-M ஏழு எழுத்துக்கள் என்பதை வாசகர்கள் கண்டு கொள்க. - தமிழாக்கினவன்....... 214. பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட அந்தத் தூதர்கள் தான் இன்று தேசத்தை விட்டுப் போய் வெளியே பிரசங்கிக்கிறார்கள். மனந்திரும்புதலை பில்லிகிரகாமைப் போல் அவ்வளவு தெளிவாகப் பிரசங்கித்தவன் உலகத்திலுண்டோ ? பில்லி கிரகாமைப் போல ஜனங்களில் உணர்ச்சியுண்டாக்கக்கூடியவன். இருக்கிறானா? சர்வ தேசத்திலுமில்லை. பில்லி ஞாயிறு என்று அதை அமெரிக்காவில் அழைத்தனர். ஆனால் பில்லிகிரகாம் உலகத்தில் பிரபலமானவன். அவன் எங்கே அழைக்கிறான்? சோதோமிலிருந்து வெளியே வர அவன் பெந்தேகொஸ்தருடன் கூடியிருக்கிறான் - ஓரல் ராபர்ட்ஸுடன். 215. தெரிந்தெடுக்கப்பட்ட கூட்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர்கள் எந்த அடையாளத்தைப் பார்க்க வேண்டும்? அவர்களிடம் என்ன இருக்க வேண்டும்? அல்லேலூயா "ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும் " (சகரியா 14:7). இந்த வேத வாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று இன்றையத்தினம் தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறிற்று அது சத்தியம் என்று நாம் அறிகிறோம். அவர் எப்படி இருந்தாரோ அப்படியே இன்றைக்கும் இருக்கிறார். 216. சற்று நேரத்துக்கு முன் நான் கூறினபடி ...... இப்போது அதைப் பிரசங்கிக்க.... சுவிசேஷ சத்தியத்தை நீ பிரசங்கிப்பாயானால், அதை நிரூபிக்கத் தேவன் கடமைப்பட்டவராயிருக்கிறார். அது உண்மைதானே? அது அப்படியானால் வார்த்தை எழுதின தேவன், தீர்க்கதரிசனத்தை உரைத்த தேவன் வார்த்தையின் தேவனாகிய தேவன் வந்து இதுவரையும் தேவனாயிருக்கிறார் என்பதை நிரூபிப்பாராக 217. எலியா மலைகளை நோக்கிச் சென்ற போது - எலிசா எலியாவைப் பின் தொடர்ந்துச் சென்றான். "எனக்கு இரண்டு பங்கு வேண்டும்” என்றான். (2 இராஜா 2:9). எலியாவின் மேலங்கி எலிசாவின் மேல் விழுந்தது. அவன் அங்கிருந்து நடந்து வந்து, அந்த அங்கியை மடித்து, நதியை அடித்து, "எலியாவின் தேவன் எங்கே?” என்றான். எலியாவால் என்ன நடந்ததோ அது எலிசாவால் நடந்தது. அதே சுவிசேஷம் அதே வல்லமை நேற்றும் இன்றும் என்றும் மாறாமல் இருக்கும் அதே மனுஷ குமாரன் - எபிரேயர் 13:8ஐ நீ விசுவாசிக்கிறாயா? 218. இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்கிறேன். நான் அவரல்ல. அவர் இங்கே இருக்கிறார். நாங்கள் அவரை எடுத்துச் செல்லும் வாகனங்களாய் இருக்கிறோம். வியாதியஸ்தருக்கும், துன்பப்படுகிறவர்களுமாகிய நாங்கள் ஜெபத்தில் தேவனிடம் கேளுங்கள். (நான் உங்களை அறியேன் என்று உங்களுக்குத் தெரியும். கர்த்தர் உங்களை அறியட்டும். நான் என்னைப் போதிய அளவு தாழ்த்த ட்டும்.......) 219. இங்கே ஜெபச்சீட்டு கொடுக்கப்படவில்லை....... இல்லை என்று நினைக்கிறேன். கொடுத்தார்களா? நாங்கள் ஒரு போதும் ஜெபச்சீட்டு கொடுப்பதில்லை. இல்லை. கொடுப்பதில்லை. நாங்கள் ஜெபக்கூட்டம் நடத்தப் போகிறோம் - அல்லது ஆலயத்தில் வியாதியஸ்தர் குணமாக்கப்படுவார்கள். ஆனால் நீங்கள் ஜெபியுங்கள். நான் உங்களை அறியாதவன் என்று உங்களுக்குத் தெரியும். தெரியாதா? ஜெபர்ஸன்வில் சபையே, நீ என்னை அறிவாய் நான் ஜெபர்ஸன் ஊராரை ஜெபிக்கச் சொல்லவில்லை. வெளியூரார் ஜெபியுங்கள். தேவன் இன்னும் வெளிப்பாடு கொடுக்கிறாரா என்று பார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறாரா என்று பார். 220. அந்த ஸ்திரீ செய்தது போலவே செய்யுங்கள். (மத்தேயு 9:20-22) அவர் கடந்துச் சென்றதும் அவள், "இந்த மனிதனை நான் விசுவாசிக்கிறேன்” என்றாள். அவளுக்கு பெரும்பாடு என்னும் ஓர் வியாதி இருந்தது. அவருடைய வஸ்திரத்தின் நுனியைக் தொடுவேனானால் நான் சொஸ்தமாவேன் என்று விசுவாசிக்கிறேன்" என்றாள். விளங்குகிறதா? அவளுடைய விசுவாசத்தால், அன்றையத்தினம் அந்த வேதவாக்கியம் நிறைவேறிற்று. நொறுங்குண்ட இருதயத்தின் காயங்களைக் கட்டுகிறார். "நான் பிணியாளிகளையும் முடவரையும் குணமாக்குகிறோம்” (ஏசா, 61:1, 35:5-6). அவள் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு விட்டுப் போய் உட்கார்ந்தாள். அவர் பின்பக்கம் திரும்பி, "என்னைப் யார் தொட்டது?” என்றார். 221. ஜன நெருக்கத்திலே அது அவருக்கு எப்படித் தெரிந்திருக்கும்? அநேகமாக இங்குள்ள ஜனத்தை விட முப்பது மடங்கு அதிகமான கூட்டம் இருந்திருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள், அவர் அதை எப்படி அறிந்தார்? "என்னை யார் தொட்டது?” என்றார். அவர் பின்பக்கம் திரும்பி, உட்கார்ந்து அல்லது நின்று கொண்டு இருந்தவளை உற்றுப் பார்த்து, "உன் பொரும்பாடு முடிந்தது” என்று அவளுக்குச் சொன்னார். அது நேற்றைய இயேசு செய்தது. இன்றைக்கும் அவரே மாறாமல் இருக்கிறார் 222. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நான் உங்களை அறியேன். தேவன் அறிவார். உன் பக்கவலி உன்னைக் கஷ்டப்படுத்துகிறது. அது உண்மை . அதைக் குறித்து அங்கே ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். நான் உனக்கு ஒரு அந்நியனல்லவா? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள். அது அப்படியானால் எழுந்து நில். உன்னை நான் அறியேன். இந்த மூலையில் இருக்கும் மனிதன், வாலிபன் உன் தொண்டை மோசமாக இருக்கிறது. நீ அதைக் குறித்து ஜெபிக்கிறாய். உனக்கு இந்த கூட்டத்தை விட்டுப் போக அலுவல் உண்டு. ஏனென்றால் நீ ஒரு ஊழியன். நீ கவனிக்க வேண்டிய ஒரு அலுவல் உண்டு. அது உண்மை. உன்னை யாரென்று தேவன் அறிந்திருக்கிறார் என்பதை நம்புகிறாயா? ரெவரண்டு ஸ்மித் அவர்களே நீர் போகலாம். நீர் குணமாக்கப்பட்டீர். இயேசு கிறிஸ்து உம்மை குணமாக்கினார். நீர் உம் கூட்டத்துக்கு போகலாம். உம் தொண்டை இனி தொந்தரவு செய்யாது. இவர் யாரை தொட்டார்? 223. பின்பக்கம் இருக்கும் மனிதன் அவஸ்தைப்படுகிறான். இவனுடைய இடது சுவி.சகோதரர் மேல் ஒரு கட்டி எழும்பியிருக்கிறது. இவன் இந்த ஊரானல்ல. நீ சுரங்கத்தில் வேலை செய்கிறாய். உண்மை . நான் உன்னை முழுமையாக அறியாதவன். அது சரியானால் உன் கையை உயர்த்து. உன் இடது சுவாசப்புண் இருக்கிறது. கூடிய சீக்கிரம் ஆபரேஷன் செய்து கொள்ள இருக்கிறாய். சரிதானே? நீ இந்த ஊரான் அல்ல. வெளியூரிலிருந்து வந்துள்ளாய். நீ வெர்ஜினியாவிலிருந்து வந்தாய் அது சரி. உன் பெயர் மிச்சல். தேவன் இதை அறிவார். என்று நம்பு(அது உண்மை ). வீட்டுக்கு சென்று சொஸ்தப்பட்டு இரு. இயேசு உன்னை குணப்படுத்துகிறார். நான் என் வாழ்க்கையிலலே அவனை கண்டதில்லை. வேண்டுமானால் அவனைக் கேளுங்கள். அவன் அங்கே உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தான். இந்த வேத வாக்கியம் இன்றையத்தினம்... 224. இங்கே ஒரு ஸ்திரீ இருக்கிறாள். சாராளைப்போல ஏன் பின்பக்கம் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். இவள் தன் மகளுக்காக ஜெபிக்கிறாள். எழுந்து நில். மகள் இங்கே இல்லை. அவள் வெளியூரில் இருக்கிறாள். தன்னுடைய மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லி இயேசுவிடம் வந்த ஸ்திரீயைப் போலவே நீயும் இருக்கிறாய். (மத். 15: 21-22) அந்தப் பெண் பிசாசு பிடித்தவள் அவள் இங்கே இல்லை. நீ வடகேரோலைனா விலிருந்து வந்திருக்கிறாய். (தேவன் அதை அறிந்திருக்கிறார் என்று அதை நீ விசுவாசி). அது உண்மைதானே? திருமதி. ஆடபரர்ஸ், நீ வீட்டுக்குப் போகலாம். உன்னுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்தால், நீ விரும்புகிறபடி ஆகக்கடவது என்று சொன்னது. நிறைவேறின்படி உன் மகளையும் நீ குணப்பட்டிக்கக் காண்பாய். 225. இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் - சோதோமின் அடையாளம் உன்னதமான வித்தின் அடையாளம். சாதாரண சபையின் அடையாளம் - உங்கள் மத்தியிலே இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று, இதை நீ விசுவாசிக்கிறாயா? இப்பொழுதே அவரை உன்னுடைய குணமளிக்கும் இரட்சகராக ஏற்றுக் கொள்வாயா? ஓவ்வொருவரும் எழுந்து நின்று என்னுடைய குணமடைதலை ஏற்றுக் கொள்கிறேன். அவரை என் இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய ராஜாவாக அவரை ஏற்றுக் கொள்கிறேன். என்று சொல்லுங்கள். ஒவ்வொருவரும் எழுந்து நில்லுங்கள். 226. இன்றையத்தினம்...... நண்பர்களே கேளுங்கள். அவர் வேதாகமத்தை வாசித்தார். வேதாகமத்ததை மறுபடியும் பணிவிடைக்காரனிடம் கொடுத்தார். எல்லோருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாய் இருந்தது. அவர் அவர்களை நோக்கி இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார். 227. ஒரு டஜன் அல்லது அதற்கு அதிகமான அடையாளங்களுடன் நான் வேதவாக்கியத்திலிருந்து வாசித்தேன். நாம் கடைசிநாளில் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். இந்த சந்ததி இயேசு கிறிஸ்து பூமிக்கு திரும்புவதைக் காணும். நீங்கள் காண இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்று இன்றிரவு உங்களுக்கு மறுபடியும் கூறுகின்றேன். 228. தொலைபேசியின் மூலம் கேட்டுக் கொண்டிருக்கும் டக்ஸனில் இருக்கிற நீங்கள். கலிபோர்னியாவிலிருக்கிற நீங்கள் நியூயார்க்கில் இருக்கிற நீங்கள் உங்கள் கண்கள் காண இந்த வேத வாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று. நாம் சந்தோஷப்பட்டு களிகூருவோமாக. ஏனென்றால் ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் சமீபமாக இருக்கிறது. மணவாட்டியானவள் - அவருடைய மணவாட்டி தன்னை ஆயத்தம் பண்ணினாள். (வெளி.19:7) 229. நமது கைகளை உயர்த்தி அவரை மகிமைப்படுத்துவோமாக (1 தீமோ 2:8) எல்லா குடிகளும் அப்படியே செய்யுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.